ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Thalapathy Vijay: லைலாவும், விஜய்யும் இதுவரை சேர்ந்து நடித்தது இல்லை. இந்நிலையில் அவர் விஜய்யை பற்றி போட்ட போஸ்ட் வைரலாகிவிட்டது.
லைலா90ஸ் கிட்ஸுகளுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் லைலா. சிரிப்பழகியான அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிரசாந்த், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் தளபதி விஜய்யுடன் சேர்ந்து லைலா நடிக்கவில்லை. இந்நிலையில் தான் தன்னிடம் இருந்து எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ விஜய் என தெரிவித்துள்ளார் லைலா.ரஜினிகாந்த்கெத்தாக வந்த ரஜினி: ஆர்ப்பரித்த ரசிகர்கள்!உன்னை நினைத்துசூர்யா, லைலா நடிப்பில் வெளியான உன்னை நினைத்து படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது விஜய் தான். விஜய், லைலாவை வை்தது போட்டோஷூட் எல்லாம் நடத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு விஜய் விலகவே சூர்யாவை நடிக்க வைத்து படத்தை வெளியிட்டார்கள். இது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
புகைப்படம்உன்னை நினைத்து போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் லைலா. அவர் வாழ்த்திய விதம் தான் அனைவரையும் கவர்ந்துவிட்டது. புகைப்படத்தை வெளியிட்டு லைலா கூறியதாவது, தப்பித்த ஒரேயொருவர் என இந்த போட்டோவுக்கு தலைப்பு கொடுப்பேன். இந்த ஒரு ஹீரோ தான் என்னிடம் இருந்து தப்பிவிட்டார். ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததை நிரூபிக்க புகைப்படங்கள் உள்ளன என்றார்.
ஆதாரம்View this post on InstagramA post shared by Laila Official (@laila_laughs)ரசிகர்கள் கோரிக்கைMaamannan collection: வசூல் மன்னனாக மாறிய மாமன்னன்: முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா!!!விஜய்யின் பிறந்தநாள் அன்று பிரபலங்களும் சரி, ரசிகர்களும் சரி தாங்கள் தளபதியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்தினார்கள். ஆனால் லைலா வெளியிட்ட புகைப்படம் பற்றி தான் இன்னும் பேசப்படுகிறது. விஜய் படத்தில் நடிக்க லைலாவுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
சர்தார்2006ம் ஆண்டுக்கு பிறகு லைலா எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதையடுத்தே கார்த்தியின் சர்தார் படம் மூலம் மீண்டும் கோலிவுட் வந்தார். தற்போது அவர் சப்தம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் படங்கள் தவிர்த்து வெப்தொடர்களிலும் நடிக்கிறார். அமேசான் பிரைமில் வெளியான வதந்தி வெப்தொடரில் லைலாவின் கதாபாத்திரத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். என்ன லைலா, இப்படி கெளம்பிட்டாரே என்றார்கள்.
லியோவிஜய்யோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இருப்பினும் இன்னமும் தினமும் புது நடிகர்கள், நடிகைகளை சேர்த்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ். அதில் ஒருவராக லைலாவையும் சேர்த்துக் கொள்ளுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லியோவில் ஒரு பட்டாளமே நடித்து வருகிறது. தளபதியின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் பாதிக்கப்படாமல் பார்த்துக்கோங்க லோகி என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
Hansika:கணவரை வேறு அறையில் தூங்கச் சொல்லும் ஹன்சிகா: ஏன் தெரியுமா?
தளபதி 68Leo: ஆட்டம் கண்ட லியோ படக்கழு, இன்னும் தொடரும்: ராஜேஸ்வரி பிரியாலியோ படத்தில் வரும் நா ரெடி பாடல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. அந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஒரு வருங்கால அரசியல்வாதியான விஜய் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என விமர்சனம் கிளம்பியது. லியோவை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.