தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவலாக தொடங்கியுள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், உள்ளிட்ட பல மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, புனே உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் கடந்த 2 நாட்களாக மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
புனே, ராய்கர் உட்பட மகாராஷ்டிரா மாநிலத்தின் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் இன்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமாச்சலில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
அந்த மனசுதான் சார்… சிறுமி டானியாவுக்கு வீட்டு மனை பட்டா… வீடு கட்டிக்கொள்ள பணம்… மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஸ்டாலின்!
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பரவலான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் அடுத்த நான்கு நாட்களில் கொங்கன் மற்றும் கோவா, குஜராத் மற்றும் மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், அசாம் மற்றும் மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லெப்ட்ல சிக்னல் போட்டு… ரைட்டுல வண்டிய விட்டு… ‘மாமன்னன்’ புகழ்ந்து தள்ளிய வன்னியரசு!
தமிழ்நாடு கேரளா, மாஹே, கடலோர கர்நாடகா மற்றும் கர்நாடகாவின் உள் பகுதிகள் உட்பட இந்தியாவின் தென் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் சிக்கிம், மேற்குவங்கம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூலை 4 ஆம் தேதி வரை இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.