என் மகன் என்னை விட லூட்டி அடிச்சிட்டிருக்கான்: ஓபனா பேசிய உதயநிதி ஸ்டாலின்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Maamannan Udhayanidhi Stalin interview: என் பையன் என்னை விட பயங்கரமாக லூட்டி அடிக்கிறான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

​மாமன்னன்​மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படம் பக்ரீத் பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸானது. முன்னதாக படத்தை விளம்பரம் செய்ய பேட்டிகள் கொடுத்தார் உதயநிதி ஸ்டாலின். அந்த பேட்டிகளில் கலகலப்பாக பேசினார். ஒரு பேட்டியில் தன் மகன் லூட்டி அடிப்பதாக கூறினார்.

​ஒரு பாட்டு பாட ரூ. 3 கோடி வாங்கும் இசையமைப்பாளர்: நாட்டிலேயே அவர் தான் காஸ்ட்லி பாடகர்வாய்ப்பில்ல​”ஒரே படத்துல சமுதாயத்தை திருத்த போறேன்னு சொல்லல” உதயநிதி பேட்டி!​​காதல் திருமணம்​கிருத்திகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி தன் காதலை முதலில் என்னிடம் தான் சொன்னார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்பு தெரிவித்திருந்தார். அது குறித்து உதயநிதியிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அப்பொழுது தான் மகன் பற்றியும் ஓபனாக பேசி அனைவரையும் வியக்க வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.

​அப்பா ஸ்டாலின்​அந்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, அப்பா எனக்கு நண்பர் போன்றவர். அப்பா, அம்மா இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும்போது, அப்பா நான் உங்களிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என்று சொன்னால் எல்லாம் முடிஞ்சுச்சு. அதனால் அப்பா தனியாக இருந்தபோது அவரிடம் என் காதலை சொன்னேன். அவரோ, அம்மாவிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார். அதனால் எந்த பிரச்சனையும் வரவில்லை என்றார்.
​காதல் வந்தது​Hansika:கணவரை வேறு அறையில் தூங்கச் சொல்லும் ஹன்சிகா: ஏன் தெரியுமா?நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். கிருத்திகா 12ம் வகுப்பு படித்தார். அப்பொழுது தான் எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. 7, 8 ஆண்டுகள் காதலித்தோம். அந்த சமயத்தில் எங்கள் வீட்டில் காதல் திருமணம் செய்யாவிட்டால் ஒரு மாதிரி பார்த்தாங்க. பல காதல் திருமணம் நடந்தது. காதலிக்கவில்லை என்றால் ஏன் என்று கேட்பாங்க என உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

​மகன் இன்பநிதி​எங்கள் வீட்டில் காதல் திருமணம் எல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. என் பையன் இப்போ என்னைவிட பெரிய லூட்டிலாம் அடிச்சிட்டு இருக்கான். இருந்தாலும் பார்த்து, உன் வயசுக்கு தகுந்த மாதிரி பண்ணுப்பா என அறிவுரை வழங்கினேன் என்றார் உதயநிதி ஸ்டாலின். இன்பநிதி கொடுத்து வைத்தவர் இப்படி ஒரு கூல் அப்பா கிடைத்திருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

​மாமன்னன் வசூல்​Maamannan collection: வசூல் மன்னனாக மாறிய மாமன்னன்: முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா!!!மாமன்னன் படம் ரிலீஸான அன்று ரூ. 5.50 கோடி முதல் ரூ. 6.50 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதியின் கெரியரிலேயே மிகப் பெரிய ஓபனிங் மாமன்னனுக்கு தான் கிடைத்திருக்கிறது. இந்த படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார். முழு நேரம் மக்கள் பணி செய்ய வசதியாக படங்களில் நடிப்பதை நிறுத்துகிறார் உதயநிதி ஸ்டாலின்.

​ரசிகர்கள் கோரிக்கை​நடிப்பை நிறுத்த வேண்டாம். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் உதய்ணா என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு அவரோ, வாய்ப்பில்ல ராஜா என பதில் அளித்திருக்கிறார். அப்படியே உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிக்க வந்தால் அந்த படத்தை மாரி செல்வராஜ் தான் இயக்குவாராம்.

​Vijay: விஜய் பற்றிய முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட நடிகை லைலா​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.