சென்னை: கமல்ஹாசனின் KH 233 படத்தை H வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸின் 52வது படமாக KH 233 உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், KH 233 பூஜை போடும் முன்பே, படத்தின் ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ் பல கோடிகளில் நடந்து முடிந்துள்ளதாம்.
KH 233 ஓடிடி ரைட்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்: உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் ஆகியோருடன் ப்ராஜக்ட் கே படத்தில் இணைந்துள்ளார். நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கமலின் அடுத்த படங்கள் குறித்தும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் KH 234 படத்தை குறிப்பிடலாம். அதேபோல், இயக்குநர் H வினோத்துடன் முதன்முறையாக இணைந்துள்ள கமல், தனது 233வது படத்தில் அவருடன் இணைகிறார். இந்தப் படத்தையும் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளார்.
இது ராஜ்கமல் பிலிம்ஸின் 52வது படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இதுவரை இப்படத்தின் அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம் KH 233 படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி தான் இப்படத்தின் ஹீரோ என்றும், கமல் கேமியோ ரோலில் மட்டுமே நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது.
KH 233 படத்தின் ப்ரீ-புரொடக்ஷனில் பிஸியாக இருக்கும் ஹெச் வினோத், விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். அதன்படி, KH 233 படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், KH 233 படத்தின் ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ் பல கோடிகளில் நடந்து முடிந்துள்ளதாம்.
முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் தான் KH 233 ஓடிடி ரைட்ஸை வாங்கியதாக சொல்லப்படுகிறது. 35 முதல் 40 கோடி ரூபாய் வரை இந்த பிஸினஸ் நடந்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்கும் முன்பே KH 233 படத்தின் ஓடிடி உரிமை பல கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதேநேரம், KH 233 படத்தின் அபிஸியல் அப்டேட்டை செம்ம மாஸ்ஸாக வெளியிட கமல் பிளான் செய்துள்ளாராம். அதன்படி, KH 233 அபிஸியல் அப்டேட் கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளியாக உள்ளதாம். ஜூலையில் வெளியாகும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் KH 233 டைட்டில் உட்பட மற்ற அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ள KH 233 படத்தில் மறைந்த மாமேதை நம்மாழ்வார் போன்ற ஒரு பாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.