தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பீரியட் பிலிமாக உருவாகி வரும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். அந்த வகையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை அள்ளக்கூடியவர் தனுஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி வரவேற்பை பெற்ற ‘வாத்தி’ படத்தினை தொடர்ந்து தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ராக்கி, சாணிக்காயிதம் போன்ற ராவான படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘சாணிக்காயிதம்’ படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இவரது இரண்டு படங்களும் அருணின் மிரட்டலான மேக்கிங்கால் ரசிகர்களை கவனம் ஈர்த்தது. ஆனால் இந்த இரண்டு படங்களும் வசூலில் பெரிதான வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படம் நிச்சயமாக அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1930 – 40 காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பீரியட் பிலிமாக இதனை இயக்கி வருகிறார் அருண் மாதேஸ்வரன். தனுஷ் இலங்கையை சார்ந்த போராளியாக நடிக்கும் இந்தப்படம் இரண்டு பாகங்களாக உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Maamannan: மாமன்னனால் உதயநிதிக்கு நடந்த நல்ல விஷயம்: இதுதான் பர்ஸ்ட் டைம்.!
இந்நிலையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான பிணங்களுக்கு நடுவில் மிஷின் கன்னுடன் இரத்தம் வலிய மிரட்டலான லுக்குடன் தனுஷ் நிற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வெறித்தனமான போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், பாலசரவணன் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் கன்னட பிரபலம் சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்தப்படத்தில் நடிக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
Lust Stories 2: பரபரப்பை கிளப்பிய ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ எப்படி இருக்கு.?: முழு விமர்சனம் இதோ.!