ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படம் குறித்து முன்னாள் சபாநாயகர் தனபால் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாமன்னன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அத்துடன் பல விவாதங்களையும் கிளப்பி வருகிறது. மேலும், இந்தப்படத்தில் ஏராளமான டீடெய்லிங்கையும் கண்டுபிடித்து வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் ‘மாமன்னன்’ படம் குறித்து பிரபல அரசியல் பிரமுகர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடைசி படம்உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக ‘மாமன்னன்’ உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த இவர் அமைச்சராக பொறுப்பேற்ற பின் சினிமாவிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து ‘மாமன்னன்’ இவரின் கடைசி படமாக அமைந்துள்ளது. மேலும், ரிலீசுக்கு முன்பாகவே இந்தப்படத்தை பார்த்த உலக நாயகன் கமல், யாருக்கும் கடைசி படம் இவ்வாறு அமையாது என தெரிவித்தார்.வடிவேலுதமிழ் சினிமாவில் சமூக கருத்துக்களை சார்ந்த படங்களை இயக்கி வரும் மாரி செல்வராஜின் மூன்றாவது படைப்பாக தற்போது ‘மாமன்னன்’ உருவாகியுள்ளது. டைட்டில் ரோலில் வடிவேலு நடித்துள்ள இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மாமன்னன் கதைஇந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக வடிவேலுவின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும், இந்தப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலுவின் சாயலில் இருப்பதாக படத்தை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதிக்கு நன்றிஇந்நிலையில் இதுக்குறித்து பேசியுள்ள தனபால், ‘1972 ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவில் பயணித்து வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிரமான விசுவாசி நான். என்னுடைய உழைப்பிற்கு பல பெரிய பதவிகள் தந்தாங்க. ‘மாமன்னன்’ படம் என்னுடைய சாயலில் வெளிவந்திருந்தால் அது அம்மாவுக்கு கிடைத்த வெற்றி. அதுக்காக படத்தை எடுத்த, அதில் நடித்த உதயநிதிக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.