Ram Charan: சிரஞ்சீவி பேத்தி.. ராம்சரண் மகள்.. க்யூட் பெயர் வைத்த குடும்பத்தினர்!

ஐதராபாத்: நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனா ஜோடிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில், இதை அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம், குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா வெகு விமரிசையாக நடந்துள்ளது. விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.

நடிகர் ராம்சரண் -உபாசனா மகளுக்கு வைத்த பெயர்: நடிகர் ராம்சரண், நடிகர் சிரஞ்சீவியின் மகன். நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர். இவரது மகன் ராம்சரணும் கடந்த சில வருடங்களாக நடித்துவரும் நிலையில், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டில் வெளியான ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகர் என்டிஆருடன் இணைந்து இவர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ஆடிய நாட்டுக்கூத்து பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு ராம்சரணின் மார்க்கெட் மட்டுமில்லாமல் சம்பளமும் உயர்ந்துள்ளது. அவர் 100 கோடி ரூபாய் வரை தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தெரிகிறது. தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ராம்சரண். கடந்த 2012ம் ஆண்டில் உபாசனா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் ராம்சரண். இவர் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து தற்போது பெண்குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 20ம் தேதி ஐதராபாத்தில் பிரபல மருத்துவமனையில் உபாசனாவிற்கு குழந்தை பிறந்தது. இத்தனை வருடங்கள் கழித்து பிறந்துள்ள இந்த பெண் குழந்தையை அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். ராம் சரண், உபாசனா மட்டுமில்லாமல் சிரஞ்சீவிக்கும் தாத்தா ஆனதையொட்டி வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. குழந்தையை பெற்றுவிட்டு மருததுவமனையில் இருந்து வெளியில் வந்தபோதே உபாசனா, ராம்சரண் மற்றும் குழந்தையை பார்க்க ஏராளமான ரசிகர்கள் மருத்துவமனையின் வாசலில் குவிந்து வாழ்த்துக்களை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய தினம் ராம்சரணின் மகளுக்கு பெயர் சூட்டு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி உபாசனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் தன்னுடைய பேத்திக்கு வைக்கப்பட்ட பெயர் குறித்து நடிகர் சிரஞ்சீவி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். குழந்தைக்கு கிளின் காரா கோனிடாலா என்று பெயரிடப்பட்டுள்ளதாக அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான இந்தப் பெயர் லலிதா சகஸ்ரநாமத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தூய்மையான வலிமையால் உண்டாகும் ஆன்மீக எழுச்சியை இந்த பெயர் குறிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவள் வளரும்போது இந்த பண்புகளும் அவளுக்குள் வளரும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குழந்தை பெயர் சூட்டு விழாவில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உபாசனாவும் தன்னுடைய பெற்றோர் மற்றும் மாமனார் -மாமியார் ஆகியோருடன் தன்னுடைய குழந்தை உள்ள புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். மேலும் மூன்று தலைமுறையினரும் இருக்கும் வகையிலும் புகைப்படத்தை இணைத்துள்ளார். அனைவரும் வெள்ளை நிற கான்செப்டில் உடைகளை அணிந்திருந்தனர். குழந்தை இருந்த தூளியின் நிறமும் அதே கலரில் அமைந்திருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.