நடப்பு ஜூலை 2023-ல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வவிருக்கும் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை பற்றி ஒரு தொகுப்பை அறிந்து கொள்ளலாம். மாருதி இன்விக்டோ, செல்டோஸ், எக்ஸ்டர், பென்ஸ் GLC என பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Maruti Invicto
மாருதி சுசூகி நிறுவனம், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட காரை இன்விக்டோ என்ற பெயரில் ஒற்றை வேரியண்ட் மட்டும் கொண்ட ஹைபிரிட் 7 இருக்கை பிரீமியம் எம்பிவி மாடலை நெக்ஸா மூலம் விற்பனை செய்ய உள்ளது.
ஜூலை 5 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள மாருதி சுசூகி இன்விக்டோ விலை ரூ.28 லட்சத்தில் துவங்லாம். தோற்ற அமைப்பில் முன்பக்க கிரில்,ஹெட்லைட் மட்டும் லேசாக மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி, இன்டிரியர் வசதிகளில் எந்த மாற்றமும் இருக்காது.
2023 Kia Seltos Facelift
ஜூலை 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் பல்வேறு ஸ்டைலிஷான மாற்றங்களை பெற்று, கூடுதல் வசதிகளை கொண்டிருக்கும். குறிப்பாக இன்டிரியரில் , டூயல் டிஸ்பிளே பெற்ற இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றிருக்கும்.
தற்பொழுது விற்பனையில் உள்ள என்ஜின் விருப்பங்களான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினுடன் வரவுள்ளது. கூடுதலாக, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெற உள்ளது.
புதிய 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் ADAS சார்ந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டிக்கலாம். அறிமுகத்தை தொடர்ந்து விலை ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படலாம்.
Hyundai Exter
ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி கார் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் 1.2 லிட்டர் என்ஜினை கொண்டிருக்கும். டாடா பஞ்ச், இக்னிஸ் உள்ளிட்ட துவக்க நிலை எஸ்யூவி மற்றும் ஒரு சில ஹேட்ச்பேக் கார்களை எதிர்கொள்ள உள்ளது.
குறிப்பாக, சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை கொண்டிருப்பதுடன் ஸ்டைலிஷான நிறங்களை பெற்று ஹூண்டாய் எக்ஸ்டர் ரூ.7 லட்சம் விலைக்குள் துவங்கலாம்.
உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாடல்களை தவிர சிட்ரோன் சி3 ஏர்கிராஸ், எலிவேட் எஸ்யூவி, மெர்சிடிஸ்-பென்ஸ் GLC உள்ளிட்ட சில மேம்பட்ட வசதிகளை கொண்ட மாடல்கள் வெளியாகலாம்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு வாகனங்களை வெளியிட இந்திய தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர்.