வந்தே பாரத் அடித்த \"சிக்ஸர்\".. திகைத்த திருநெல்வேலி.. ரயில் கட்டணம் எவ்ளோ? சாப்பாடு தரப்போறாங்களாமே

நெல்லை: நெல்லைக்கு விரைவில் வந்தே பாரத் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால், திருநெல்வேலி மக்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை – மைசூர், சென்னை – கோவை, திருவனந்தபுரம் – காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன.

அடுத்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தெற்கு ரயில்வேக்கு வெகுவிரைவில் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது. இந்த பெட்டியை வைத்து தெற்கு ரயில்வே திருநெல்வேலி – சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தென்மாவட்டங்கள்: இதற்கு காரணம், சென்னை – நெல்லை ரயிலை இயக்கும்போது, அதிக வருமானத்தை ஈட்டித்தரும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தென் மாவட்ட மக்களுக்கும் கூடுதல் ரயில் சேவையாகவும், பகல் நேர ரயில் சேவையாகவும் அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதனால்தான், சென்னையிலிருந்து நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருந்தார்.. இந்த அறிவிப்பானது, தென் மாவட்ட மக்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

நெல்லை டூ சென்னை: இதையடுத்து, திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையின் கால அட்டவணை ஒன்று, சோஷியல் மீடியாவில் வைரலாக துவங்கியது.. அதன்படி, இந்த ரயில் திருநெல்வேலியிருந்து காலையில் புறப்பட்டு மதியம் சென்னை சென்று விட்டு, மதியம் சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு திருநெல்வேலி வந்து சேருமாறு காலஅட்டவணை அமைத்து இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், நெல்லை – சென்னை வந்தே பாரத் குறித்து, தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர், சொல்லும்போது, சென்னையில் இருந்து நெல்லைக்கு முதன்முறையாக நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. அதன் மூலம் தென் மாவட்டங்களில் இருந்து மிக விரைவில் சென்னையை சென்றடைய முடியும்.

ஆனால், திண்டுக்கல் – மதுரை – நெல்லை இடையிலான தண்டவாளத்தை 1330 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக குறையும். அத்துடன் ரயில்வே அறிவித்தபடி, ஆகஸ்ட் மாதம் சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும்” என்றார்.

3000 ரூபாய்: அதுமட்டுமல்ல, நெல்லை சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் கார், எக்கனாமிக் சேர் கார் ஆகிய 2 வகுப்புகளில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.. அதில் ஏசி சேர் கார் பயண கட்டணம் 3000 ரூபாய் வரை இருக்கலாம் என்றும், எக்கனாமி சேர் கார் பயண கட்டணம் 1400 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது… அது மட்டுமல்லாமல் அந்த கட்டணத்தில் பயணிகளுக்கான உணவும் வழங்கப்பட உள்ளதாம்.

இதையடுத்து, வந்தே பாரத் ரயிலை நெல்லையில் பராமரிக்க நெல்லை சந்திப்பில் உள்ள பிட் லைன் எனப்படும் பராமரிப்பு தண்டவாள பகுதி மேம்படுத்தப்படுகிறது… அந்த கோச்சுகளுக்கு சார்ஜ் ஏற்றுக்கொண்டு பராமரிக்கும் வகையில் மேல் பகுதியில் மின்சார பாதையும் அமைக்கப்படுகிறது.. இதற்கான தூண்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், விரைவில் மின் கம்பிகளும் பொருத்தப்பட உள்ளதாம்..

6வது பிளாட்பாரம்: எப்படி பார்த்தாலும், இந்த வந்தே பாரத் ரயிலின் அனைத்து பராமரிப்பு பணிகளும், இந்த ஜூலை மாதம் முடிந்துவிடும் என்கிறார்கள்.. ஆனால், இப்போதைக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில், வெறும் 5 பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளதால், 6வதாக உள்ள ரயில்வே பிளாட்பாரம் சரக்கு இறங்குதல தண்டவாளமாக செயல்பட்டு வருகிறது.. அதனை ஆறாவது பிளாட்பாரமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது… அதற்கான பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.