திமுக கூட்டணியில் பாமக? முஷ்டி முறுக்கும் திருமா – ஸ்டாலின் எடுக்கும் இறுதி முடிவு என்ன?

2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பாமக இணைந்து போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தன. அதன்பின்னர் திமுக – பாமக கூட்டணி அமையவில்லை. 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் கூட்டணிக்கான வாய்ப்பு உருவாகி வருவதாக சிலர் கூறுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தேசிய அளவில் கூட்டணிக்கான பணிகளை முயன்றாலும் மாநிலத்தில் திமுக கூட்டணி ஹவுஸ் ஃபுல்லாகவே இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் நின்ற கட்சிகளில் பாரி வேந்தரின் ஐஜேகவை தவிர அனைத்து கட்சிகளும் இன்னும் கூட்டணியில் தொடர்கின்றன. அதற்கு பதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளே வர ஆயத்தமாகி வருகிறது.

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு?கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, மதிமுக 1, கொமதேக 1, முஸ்லீம் லீக் 1, ஐஜேகே 1 என்ற வகையில் போட்டியிட்டன. மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளே வந்தால் ஐஜேக கட்சிக்கு கொடுத்த ஒரு தொகுதியோ அல்லது இரண்டு தொகுதியோ அளிக்க வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் பாமக கூட்டணிக்குள் வர காய் நகர்த்தி வருவதாக கூறுகிறார்கள். இது பற்றி விசாரித்தோம்.
பாமக எந்த பக்கம்?“பாமகவை பொறுத்தவரை 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி இரண்டு பக்கமும் கதவைத் திறந்து வைத்தது. இரண்டு பக்கமும் எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி தங்களுக்கான முக்கியத்துவத்தை அதிகரிப்பது அக்கட்சியின் நீண்ட கால யுத்தி. அந்த வகையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் அப்படியே இரு பக்கமும் துண்டைப் போட்டுள்ளது.
திருமண வரவேற்பில் உறுதியாகிறதா கூட்டணி?எந்த கூட்டணி என்பதில் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இன்னும் ஒருமித்த கருத்து வரவில்லை. இப்படியான சூழலில் சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்வில் ராமதாஸுகும், முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேச உள்ளனர். காங்கிரஸ் செயல் தலைவரும், ஆரணி மக்களவை உறுப்பினருமான விஷ்ணு பிரசாத் அன்புமணியின் மனைவி சவுமியாவின் தம்பி ஆவார்.

திமுக – காங்கிரஸ் – பாமக சந்திப்பு!விஷ்ணுபிரசாத்தின் மகள் திருமணம் திருப்பதியில் சமீபத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பாமக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மூத்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மல்லிகார்ஜுன கார்கே, ராமதாஸ், மு.க.ஸ்டாலின் ஆகியோர் சந்திக்க வாய்ப்பு உள்ளது. இந்த சந்திப்பு கூட்டணிக்கான வாய்ப்பாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் இதில் சில பிரச்சினைகளும் உள்ளன.
ராமதாஸை முந்தும் கமல்ஹாசன்​​
பாமக கூட்டணிக்குள் வந்தால் நாங்கள் வெளியேறுவோம் என்று விசிக கூறும். அது தேவையற்ற குழப்பத்தை கூட்டணிக்குள் ஏற்படுத்தும். விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்தால் போதும், பாமக குறைந்தது ஐந்து தொகுதிகள் கேட்கும், அப்போது திமுக தனது இடங்களில் சிலவற்றை இழக்க நேரிடும். எனவே திமுகவை பொறுத்தவரை தற்போது இருக்கிற கூட்டணியில் கமல்ஹாசனை மட்டும் இணைத்துக் கொண்டு செல்லும்” என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.