Maamannan: உதயநிதியின் செயலால் உச்சகட்ட கோபத்திற்கு ஆளான மாரி செல்வராஜ்..அதுக்குன்னு இப்படியா ?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமாவின் பரபரப்பான இயக்குனராக உருவெடுத்துள்ளார். பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினார் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார்.

இவ்விரு படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த மாரி செல்வராஜிற்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன. துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்த மாரி செல்வராஜிற்கு தனுஷின் தயாரிப்பில் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால்
உதயநிதி
மாரி செல்வராஜுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்றும், அப்படம் தான் உதயநிதியின் கடைசி படமாக இருக்கவேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டதால், மாரி செல்வராஜ் மற்ற படங்களை விட்டுவிட்டு உதயநிதியின் படத்தை இயக்க சென்றார்.

உதயநிதியின் முடிவு

இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் உருவான மாமன்னன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மாஸ் ஹிட்டடித்து வருகின்றது. உதயநிதி உட்பட வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் என பலர் நடிப்பில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிறந்த சமூக கருத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக படம் பார்த்த அனைவரும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.

Maamannan: மாமன்னன் மூலம் வடிவேலுவுக்கு அடித்த ஜாக்பாட்..திட்டம் போட்டு காய் நகர்த்திய வைகைப்புயல்..!

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட உதயநிதி படத்தை பற்றியும் மாரி செல்வராஜுடன் பணியாற்றியதை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் மாமன்னன் படம் தான் என் கடைசி படம் என அனைவரிடமும் கூறினேன். மாரி செல்வராஜும் இது என் கடைசி படம் என்பதால் மற்ற படங்களை விட்டுவிட்டு எனக்காக மாமன்னன் படத்தை இயக்க சம்மதித்தார்.

இதையடுத்து மாமன்னன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ராஜ்
கமல்
பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. கதையும் அருமையாக இருந்தது. எனவே மாரி செல்வராஜிடம் சென்று, இதுபோல ஒரு அருமையான கதை கிடைத்துள்ளது, இன்னொரு படத்தில் நான் நடிக்கலாம் என இருக்கேன் என்றேன்.

மாரி செல்வராஜின் கோபம்

இதைக்கேட்டதும் மாரி செல்வராஜ் கடுமையான கோபத்திற்கு ஆளானார். அப்போ என்னிடம் பொய் சொன்னீங்களா ? எனக்கு அதெல்லாம் தெரியாது, இதுதான் உங்க கடைசி படம், இதன் பிறகு நீங்க நடிக்கக்கூடாது என மாரி செல்வராஜ் கூறியதாக உதயநிதி

ஜாலியாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றவுடன் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என்ற முடிவை உறுதிப்படுத்தினார். இதன் காரணமாகவே ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் படத்திலிருந்து விளக்கினார் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.