கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் நாட்களிலும் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு கேரளா விரையும் தகவல் வெளியாகியுள்ளது.
வீக்கெண்ட் வைப்ஸ்ஸாம்… புடவையில் கிறங்க வைக்கும் க்ரித்தி ஷெட்டி!
இதுகுறித்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தென் மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 04 வது படை பிரிவில் இருந்து கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில் 25 பேர் கொண்ட 07 குழுக்கள் கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா, ஆழப்புலா, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், வயநாடு ஆகிய 7 மாவட்டத்திற்கு கேரள மாநில அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் 7 குழுக்கள் விரைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினுக்கு அண்ணாமலை செக்… அப்போ அப்படி சொன்னீங்க? ஆதாரத்துடன் கிடுக்கிப்பிடி!
நவீன தொலை தொடர்பு சாதனங்கள் பொருத்திய வாகனம் , ரப்பர் படகு, மரம் வெட்டும் கருவிகள் வெள்ளம் ,மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பட்சத்தில் மீட்பு உபகரணங்கள் ஆகியவற்றுடன். துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் வீரர்கள் கேரளா மாநிலத்திற்கு விரைகின்றனர். மேலும் கேரள மாநில அவசர கால கட்டுப்பாடு மையத்துடன் இணைந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் 24*7 மணி நேர அவசர கால உதவி மையம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் இடுக்கி கண்ணூர், காசர்காட் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. திங்கள் கிழமை வரை கன மழை நீடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. ஜூலை 2ஆம் தேதி வரை திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 3ஆம் தேதி பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனசுதான் சார்… சிறுமி டானியாவுக்கு வீட்டு மனை பட்டா… வீடு கட்டிக்கொள்ள பணம்… மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஸ்டாலின்!
தொடர் கன மழை காரணமாக அப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கனமழை, வெள்ளப்பெருக்கு, மற்றும் நிலச்சரிவில் உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கேரள மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையை கேரள அரசு அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.