புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைக்கால கூட்டத்தொடர்… புயலை கிளப்புமா மணிப்பூர் கலவரம்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் இந்த கூட்ட தொடர் ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடையும் என்றும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில்தான் இந்த ஆண்டின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்காக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்தான் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிரா பஸ் விபத்துக்கு காரணம் இதானா? பறிபோன 26 உயிர்கள்… நெஞ்சை உலுக்கும் தகவல்!

இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப, எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத் தொடர் விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கூட்டத் தொடரில் டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் மணிப்பூர் கலவரத்தை வைத்தும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பும் என கூறப்படுகிறது. மேலும் அவதூறு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரமும் நடைபெறவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

முதல் தலைமுறை பட்டதாரியா நீங்க… உங்களுக்குதான் இந்த ஜாக்பாட்!

அதேநேரத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இணைந்து வியூகம் வகுத்து வருகின்றன. சமீபத்தில் பீஹார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் ஆளும் பாஜகவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தேசிய நிதித் தகவல் பதிவேடு, டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா மற்றும் திவால் திருத்தச் சட்டம் உள்ளிட்டவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.