தமிழ்நாடு அரசில் கடந்த இரு ஆண்டுகளாக தலைமைச் செயலாளராக பணியாற்றிய இறையன்பு நேற்று பணி ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து நேற்றைய தினமே சிவ் தாஸ் மீனா புதிய தலைமைச் செயலாளராக பதவியேற்றார்.
புதிய தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனா பதவியேற்றதுமே அதிகாரிகள் மட்டத்தில் பெரியளவில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப் போலவே இன்று பல்வேறு துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
அந்த வகையில்,
நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறை செயலாளராகக் கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மங்கத்ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக விஷு மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ்ஸுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கமணி
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் பிரபாகர் தமிழக சாலைப்பணி திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குநராக பிரபாகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.