மூத்த கலைஞர் கலாசூரி எஸ்.எச்.சரத்தின் “பாரம்பரியமும் வேற்றுமையும்” என்ற தொனிப்பொருளின் கீழான சித்திரக் கண்காட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (29) பார்வையிட்டார்.
சீ.டபிள்யூ. கண்ணங்கரா மாவத்தையில் அமைந்துள்ள சியம் இல்லத்தில் (Siam House) மே 23 ஆம் திகதி ஆரம்பமாகிய சித்திரக் கண்காட்சி ஜூலை மாதம் 04 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
எஸ்.எச்.சரத்தின் ஐம்பது வருட கலை வாழ்க்கையில் 40 வருடகாலத்தை பிரதிபலிக்கும் வகையில் அன்றாட வாழ்வியல் தொடர்பாடல்கள் மற்றும் சுற்றுச்சூழலுடன் தொடர்புபட்ட அம்சங்களை மையப்படுத்திய சித்திரங்கள் கண்காட்டசியில் காட்சிப்படுத்தப்பட்டன.
சித்திரக் கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட விருந்தினருக்கான பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார். அதனையடுத்து எஸ்.எச்.சரத் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றதோடு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கைகான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹார்ன்போல் (Poj harnpol) உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.