மகாராஷ்டிரா பேருந்து விபத்தில் பயணிகள் வெளியே வரமுடியாமல் எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மகாராஷ்டிரா பஸ் விபத்துமகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நகருக்கு நேற்று மாலை பயணிகள் சொகுசு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தில் 33 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த சொகுசு பஸ் சம்ருத்தி-மகாமார்க் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. புல்தானா என்ற இடத்தில் சென்றபோது பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்புகள் மற்றும் கம்பங்களில் மோதி கவிழ்ந்தது. தமிழகத்தில் உயர்த்தப்பட்ட புதிய மின்கட்டணம்… எதிர்ப்புகளை மீறி இன்று முதல் அமல்!
26 பேர் பலிபேருந்து கவிழ்ந்த அடுத்த சில நொடிகளில் தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் 25 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் பேருந்தில் விபத்துக்குள்ளானது எப்படி? அதில் தீப்பற்றியது எப்படி? பயணிகளால் ஏன் வெளியே வரமுடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரியா நீங்க… உங்களுக்குதான் இந்த ஜாக்பாட்!டீசல் டேங்க் சேதம்
அதாவது டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து பேருந்து உருண்டு கவிழ்ந்ததில் அதன் டீசல் டேங்க் சேதமடைந்து தீப்பற்றியுள்ளது. இந்தத் தீ மளமளவௌ பேருந்து முழுவதுமே பரவியது. பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் விபத்து நிகழ்ந்துள்ளது. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்துள்ளது.பேருந்தின் கதவுகள் இருந்த பக்கம் தரையில் சாய்ந்துள்ளது. இதனால் கதவு வழியாக பயணிகள் வெளியே வர முடியாமல் போனது. அடுத்ததாக, பேருந்து சாய்ந்து கிடந்ததால் பயணிகள் ஒருவர் மீது ஒருவர் ஒரே பக்கமாக விழுந்துள்ளனர்.
அலறிய பயணிகள்அவர்கள் எழுந்து நின்று எதிர்பக்கம் உள்ள ஜன்னலின் கண்ணாடியே உடைத்துக்கொண்டு வெளியே வருவதற்குள் பேருந்து தீக்கு இரையாகி விட்டது. இதனால் அதில் சிக்கியிருந்த பயணிகள் தப்பிக்க முடியாமல் அலறியப்படியே தீயில் எரிந்து உயிரிழந்துவிட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் தீயை உடடினயாக அணைக்க முடியவில்லை, பெரும் போராட்டத்திற்கு பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்தே தீ கட்டுக்குள் வந்தது. கொட்டித்தீர்க்கும் மழை… கேரளா விரைந்தது அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை!
அடையாளம் காண முடியாத அளவுக்கு
பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளது. உடல்களை மீட்ட மீட்பு குழுவினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாகவும் அறிவித்து உள்ளார்.
இந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகதெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.