தமிழக அரசின் 48-வது தலைமை செயலாளராக இருந்த இறையன்பு நேற்று ஓய்வு பெற்றார். இறையன்பு 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 15வது இடத்தையும் இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்தவர். 1990ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக தனது பணியை தொடங்கிய இறையன்பு ஐஏஎஸ் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், செய்தித்துறை, சுற்றுலாத்துறை என பல துறைகளில் செயலாளர் மற்றும் முதன்மை செயலாளர் என பல பதவிகளை வகித்தவர்.
நேர்மையான மக்கள் சேவை ஆற்றும் அதிகாரி என்ற பெயர் பெற்ற இறையன்பு விடுமுறை நாட்களில் கூட தனது பணியை செய்து வந்தார். இந்நிலையில் இறையன்பு ஐஏஎஸ் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் கூட மறக்கமுடியா உங்களை என உருக்கமாக கடிதம் எழுதி தனது நன்றியையும் பாராட்டுக்களையும் கூறியிருந்தார். சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் மட்டுமின்றி சாமானிய மக்களிடமும் அக்கறையும் அன்பும் செலுத்தி வந்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட இருந்து இறையன்பு ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்ட போது அப்பகுதி மக்கள் தங்களுக்கு ஆட்சியராக இறையன்புதான் வேண்டும் என போராட்டம் நடத்திய கதையெல்லாம் உண்டு. இந்நிலையில் ஓய்வு பெற்றுள்ள இறையன்புவை பாமக தலைவர்
, தங்களின் பசுமைத்தாயகம் இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், “அன்னை பூமியை காக்கும் பணிகளுக்கு முனைவர் இறையன்பு துணை நிற்க வேண்டும்! தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்களாக பணியாற்றியவர்களில் மக்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் சிலர் மட்டும் தான். அந்த சிலரின் குறிப்பிடத்தக்கவர் முனைவர் இறையன்பு. தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக உழைத்ததுடன், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்படுவதற்கு காரணமாக இருந்தார். புவிவெப்பமயமாதல் என்ற பெருந்தீமை அன்னை பூமியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலைக் காக்க வேண்டிய மிகப்பெரிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அன்னை பூமியை காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்வதிலும், அதற்கான களப் பணிகளிலும் பசுமைத்தாயகம் அமைப்புடன் இணைந்து செயல்பட முனைவர் இறையன்பு அவர்களை அழைக்கிறேன்; அழைப்பை ஏற்று அவர் முன்வர வேண்டும்” என தனது டிவீட்டின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.