What to watch on Theatre & OTT: இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

மாமன்னன் (தமிழ்)

மாமன்னன்

அதிவீரன் தன் தந்தையுடன் ஏன் பேசாமல் இருக்கிறார், மாமன்னன் என்கிற தனிமனிதனுக்கும் ரத்னவேலு என்கிற தனிமனிதனுக்கும் உள்ள அரசியல் வேறுபாடு என்ன, மாமன்னனுக்கும் ரத்னவேலுவிற்குமான மோதலில் யார் வென்றார் போன்றவற்றின் மூலமாக அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அரசியலில் இருக்கும் சாதிய அரசியலை பற்றி பேசுவதுதான் இதன் கதைக்களம்.

வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயகத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Indiana Jones and the Dial of Destiny (ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு)

Indiana Jones and the Dial of Destiny

ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கத்தில் ஹாரிசன் ஃபோர்டுடன் ஃபோப் வாலர்-பிரிட்ஜ், அன்டோனியோ பண்டேராஸ், ஜான் ரைஸ்-டேவிஸ், டோபி ஜோன்ஸ், பாய்ட் ஹோல்ப்ரூக் மற்றும் மேட்ஸ் மிக்கெல்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ (Indiana Jones and the Dial of Destiny).

அதிரடி ஆக்‌ஷன், சாகசம் எனத் தொல்பொருள் ஆராய்ச்சியைப் பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக 1981-ல் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது ‘Raiders of the Lost Ark’ என்ற ஹாலிவுட் திரைப்படம். இதன் ஐந்தாவது மற்றும் இறுதிப் பாகமாக ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கத்தில் ஹாரிசன் ஃபோர்டு நடிப்பில் ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளார்.

இப்படம் மேற்கத்திய நாடுகளில் இந்த ஜூன் மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்திய ரசிகர்களுக்கென இத்திரைப்படம் ஹாலிவுட்டுக்கு ஒரு நாள் முன்னதாகவே, அதாவது ஜூன் 29ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு எனப் பல மொழிகளில் இந்தியத் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கண்டதைப் படிக்காதே (தமிழ்)

கண்டதைப் படிக்காதே

ஜோதி முருகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் சத்யநாராயணன், ஆதித்யா, சுஜி,வைஷாலி, சீனிவாசன், ஆரியன், ஜெனி பெர்னாண்டஸ், சபிதா ஆனந்த், ராஜ் நவீன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்டதைப் படிக்காதே’. ஒன்பது சர்வதேச விருதுகள் வென்ற ஹாரர, திரில்லர் திரைப்படமான இது ஜூன் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இக்கதையில் வரும் மணிமாறன் என்ற எழுத்தாளர் ஹாரர் கதைகளை எழுதுகிறார். இக்கதையை படிக்கும் வாசகரக்ள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த மர்மங்களின் பின்னணி என்ன? என்பதே இதன் கதைக்களம்.

Kabadi Bro (தமிழ்)

Kabadi Bro

சதீஷ் ஜெயராமன் இயக்கத்தில் சுஜன், பிரியா லால், சிங்கம்புலி, மற்றும் காலமான நடிகர் மனோபாலா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். கபடியை மையமாகக் கொண்ட கதைக்களம் இது. இத்திரைப்படம் ஜூன் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Samajavaragamana (தெலுங்கு)

Samajavaragamana

ராம் அப்பாராஜு இயக்கத்தில் வெண்ணெல கிஷோர், வி.கே. நரேஷ், கௌஷிக் மஹதா உள்ளிட்டோர் நடிப்பில் குடும்பப் பின்னணியுடன் காமெடி, கலாட்டா நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜீன் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

காதலையும், சொந்தக்காரர்களையும் வெறுக்கும் கதாநாயகன் தன் குடும்பத்தின் மீது மிகுந்த அன்புகொண்டிருக்கிறார். குடும்பதிற்காக ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகன் எப்படி காதலில் விழுகிறார். அந்தக் காதலை குடும்பத்தின் சம்மதத்துடன் எப்படி திருமண பந்தமாக மாற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதைக்களம்.

Salmon (மலையாளம்)

Salmon

ஷாலில் கல்லூர் இயக்கத்தில் விஜய் யேசுதாஸ், ஜோனிதா தோடா, ராஜீவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Salmon’. திரில்லர் திரைப்படமான இது ஜூன் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

விஜய் யேசுதாஸ், தன் குடும்பத்துடன் துபாயில் வசிக்கிறார். விஜய் யேசுதாஸின் மனைவியும், குழந்தையும் சொந்த ஊருக்குச் சென்று திரும்புகையில் துபாயில் நடக்கும் மர்மமான கொலை அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. அதன் பின்னணி என்ன? அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? என்பதே இதன் கதைக்களம்.

Spy (தெலுங்கு)

Spy

தெலுங்கு படங்களில் படத்தொகுப்பாளாரகப் பணியாற்றிய கேரி பிஎச் இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா, ஆர்யன் ராஜேஷ், நிதின் மேத்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Spy’.

‘RAW’ ஏஜெண்டாக இருக்கும் கதாநாயகன் தன் நாட்டையும் குடும்பதையும் தீவிரவாதிகளிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறார். தீவரவாதிகளால் கொலை செய்யப்பட்ட தன் சகோதரன் கொலையின் பின்னணி என்ன? என்பதுதான் இதன் கதைக்களம்.

Satyaprem Ki Katha (இந்தி)

Satyaprem Ki Katha

சமீர் வித்வன்ஸ் இயக்கத்தில் கியாரா அத்வானி, கார்த்திக் ஆர்யன், கஜராஜ் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Satyaprem Ki Katha’. காதல் திரைப்படமான இது ஜீன் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சரியான வேலை இல்லாத பேச்சுலராகத் திரியும் கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வாணியைப் பார்த்துக் காதலில் விழுகிறார். ஆனால், கியாராவிற்கு ஏற்கனவே ஒரு காதல் இருக்கிறது. ஒரு கட்டத்தில் கியாராவின் காதல் தோல்வியடைய, தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குச் சென்றுவிடுகிறார். அவரைக் காப்பாற்றும் கார்த்திக் ஆர்யனை கியாராவின் பெற்றொருக்குப் பிடித்துப் போகிறது. கியாராவும் அரை மனதுடன் கார்த்திக் ஆர்யனைத் திருமணம் செய்துகொள்கிறார். இருப்பினும், கடந்த கால காதல் ஏமாற்றத்திலிருந்து இன்னும் வெளிவரதவராக இருக்கிறார் கியாரா. இந்நிலையில் இருவரும் எப்படி நெருக்கமாகி காதலர்களாக மாறுகிறார்கள் என்பதே இதன் கதைக்களம்.

Ruby Gillman, Teenage Kraken (ஆங்கிலம்)

Ruby Gillman, Teenage Kraken

கிர்க் டெமிக்கோ, ஃபரின் பேர்ல் இயக்கத்தில் ஜேன் ஃபோண்டா, லானா காண்டோர், டோனி கோலெட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ruby Gillman, Teenage Kraken’. ஆக்‌ஷன், அட்வன்சர் அனிமேஷன் திரைபடமான இது ஜூன் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இளம் பள்ளி மாணவியாக இருக்கும் ரூபிக்கு ஒரு கட்டத்தில் தான் போர்வீரர் கிராகன் ராணிகளின் நேரடி வழித்தோன்றல் என்பது தெரிய வருகிறது. இதையடுத்து தன் முன்னோர்களைப் போல மாயாஜால சக்திகளுடன் மக்களைக் காக்க தீய சக்திகளை எதிர்த்துப் போராடுகிறார். க்யூட்டான சிறுவயது பெண்ணான ரூபி, தீய சக்திகளை வென்றாரா? இல்லையா? என்பதுதான் இதன் கதைக்களம்.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Lust Stories 2 (இந்தி) Netflix – June 29

Lust Stories 2

காதல், காமம், திருமண உறவு என பாலியல் புரிதல்கள் மற்றும் இன்றைய உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து 2018-ல் வெளியான ஆன்தாலஜி திரைப்படம் ‘Lust Stories’. இதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது ‘Lust Stories 2′. ஆர்.பால்கி, சுஜோய் கோஷ், அமித் ரவீந்தர்நாத் சர்மா உள்ளிட்டோர் இந்த ஆன்தாலஜியை இயக்கியுள்ளனர். அங்கத் பேடி, தமன்னா பாட்டியா, நீனா குப்தா உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஜூன் 29ம் தேதி வெளியாகியுள்ளது.

Run Rabbit Run (ஆங்கிலம்) Netflix

Run Rabbit Run

கிர்க் டெமிக்கோ, ஃபரின் பேர்ல் இயக்கத்தில் ஜேன் ஃபோண்டா, லானா காண்டோர், டோனி கோலெட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Run Rabbit Run’. ஹார்ரருக்கும், திரில்லருக்கும் பஞ்சமில்லாத இந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ஜூன் 28ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தாயாக இருக்கும் சாரா கிரிகோரி மற்றும் அவரது மகள் மியாவிற்கும் இடையே நடக்கும் சைக்கலாஜிக்கள் திரில்லர் படம்தான் இந்த ‘Run Rabbit Run’. தனிமையிலேயே வாழும் மியாவிற்கு முயல் ஒன்று பிறந்த நாள் பரிசாகக் கிடைக்கிறது. முயலுடன் பேசி தன் தனிமையைப் போக்கும் மியாவின் இயல்பானச் செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைகிறது.

ஒரு கட்டத்தில் அச்சமூட்டும் படங்களை வரைவது, வித்தியாசான செயல்களில் ஈடுபடுவது, அடிக்கடி காரணமில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வது என மனம்நலம் பாதிக்கப்பட்டவளாக மாறிவிடுகிறாள் மியா. இதைக் காணும் தாய் சாராவிற்கு அச்சம் ஏற்பட, இதற்கானக் காரணம் பற்றி தெரிந்துகொள்ள முயல்கிறார். இது அமானுஷ்யப் பேயா?, அல்லது சிறு வயதில் தன் சகோதிரியைக் கொன்றதால் மனதில் தோன்றும் குற்றவுணர்வா?, சகோதரியின் பழிவாங்களா? முயலுக்கும், இக்கதைக்கும் என்ன தொடர்பு என்பதுதான் இதன் கதைக்களம்.

இந்த வார வெப்சீரிஸ்கள்

The Night Manager 2 (இந்தி) – Disney+ Hotstar

The Night Manager 2

ஆக்‌ஷன், திரில்லர், மர்மங்கள் என இந்திய உளவுத்திறையை அடிபடையாகக் கொண்டு திரில்லர் கதையாக வெளியான ‘The Night Manager’ வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் இந்த The Night Manager 2. சந்தீப் மோடி, ஸ்ரீதர் ராகவன் இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், தில்லோடமா ஷோம், அனில் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் ஜூன் 30ம் தேதி வெளியாகியுள்ளது.

Sergeant (இந்தி) – Jio Cinema

Sergeant

பிரவால் ராமன் இயக்கத்தில் ரன்தீப் ஹூடா, அருண் கோவில், டாப்னே அலெக்சாண்டர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sergeant’. இரணுவ அதிகாரியாக இருக்கும் கதாநாயகன் ஒரு பொய் வழக்கில் மாட்டிக் கொண்டு பெரும் மன உலைச்சலுக்கு ஆளாகிறார். இந்த வழக்கிலும், மன அழுத்ததிலுமிருந்து அவர் எப்படி மீண்டார் என்பதே இதன் கதைக்களம். திரில்லர் வெப்சீரிஸான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் ஜூன் 30ம் தேதி வெளியாகியுள்ளது. இதை ‘Jio Cinema’ ஆப்பில் தற்போதைக்கு மட்டும் இலவசமாகவே பார்க்கலாம்.

Titans S4 (ஆங்கிலம்) – Netflix

Titans S4

DC-யின் ‘Titans’ சீரியஸின் நான்காவது சீசனாக வெளியாகும் வெப்சீரிஸ் இது. கோதம்(Gotham) சிட்டியை அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டு, சான்பிரன்சிஸ்கோ சென்று அங்கு நடக்கும் மர்மங்களை எதிர்கொள்வதுதான் இதன் கதைக்களம். ப்ரெண்டன் த்வைட்ஸ், மேம்-அன்னா டியோப், டீகன் கிராஃப்ட், ரியான் பாட்டர் உள்ளிட்டோர் சூப்பர் ஹீரோக்களாக இதில் நடித்துள்ளனர். நிக் கோபஸ் இதை இயக்குகிறார். ஆக்‌ஷன், அட்வன்சர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஜூன் 25ம் தேதி முதல் வெளியாகிறது.

The Witcher S3 (English) Netflix

The Witcher S3

ஸ்டீபன் சுர்ஜிக் மற்றும் லோனி பெரிஸ்டர் உள்ளிட்டோர் இயக்கத்தில் ஹென்றி கேவில், ஃப்ரேயா ஆலன் மற்றும் அன்யா சலோத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஜூன் 29ம் தேதி முதல் வெளியாகும் வெப்சீரிஸ் ‘The Witcher S3’.

‘Witchers’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் திரில்லர் வெப்சீரிஸ் ‘Witchers’. இதன் முந்தைய பாகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக மூன்றாவது சீசனாக வெளியாகிறது இந்த வெப்சீரிஸ்.

Jack Ryan S4 (English) – Amazon Prime Video

Jack Ryan S4

கார்ல்டன் கியூஸ், கிரஹாம் ரோலண்ட் இயக்கத்தில் வெண்டெல் பியர்ஸ், மைக்கேல் கெல்லி, பெட்டி கேப்ரியல், அபி கார்னிஷ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் ஜூன் 30ம் தேதி முதல் வெளியாகும் வெப்சீரிஸ் ‘Jack Ryan S4’.

2018ம் ஆண்டு வெளியன ‘Jack Ryan’ வெப்சீரிஸின் கடைசி சீசன் இது. சிஐஏ-வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட க்ரைம் திரில்லர் வெப்சீரிஸ் இது.

Celebrity (Korean) – Netflix

Celebrity

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் என்னென்ன பிரச்னைகளை தங்களின் வாழ்வில் சந்திக்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்டதுதான் இதன் கதைக்களம் . பார்க் கியூ-யங், லீ சுங்-ஆ, காங் மின்-ஹியுக் உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். கிம் சியோல்-கியூ இதை இயக்குகிறார். கொரிய மொழியில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் ஜூன் 30ம் தேதி முதல் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Delete (Thai) Netflix

பார்க்பூம் வாங்பூம் இயக்கத்தில் சரிகா சத்சில்ப்சுபா, நாட் கிச்சரிட், சுடிமோன் சுயெஞ்சரோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தாய் மொழி வெப்சீரிஸ் ‘Delete’. இந்த வெப்சீர்ஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஜூன் 28 முதல் வெளியாகிறது.

விசித்திரமான செல்போன் கேம்ராவில் போட்டோ எடுக்கப்பட்டவர்கள் மாயமாகக் காணமல் போகிறார்கள்.இந்த செல்போனைப் பயன்படுத்தி தங்களுக்குப் பிடிக்காத நபர்களைக் காணாமல் போகச் செய்கிறார்கள் இக்கதையின் கதாநாயகர்களான காதல் ஜோடிகள். இந்த மர்மத்தின் பின்னணி என்ன? என்பதே இதன் கதைக்களம்.

தியேட்டர் டு ஓடிடி

வீரன் – Amazon Prime Video

வீரன்

`மரகத நாணயம்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, வினய், ‘நக்கலைட்ஸ்’ சசி, ஜென்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீரன்’. கிராமத்து சூப்பர் ஹீரோவான குமரனும் , ஊர் எல்லை சாமியான வீரனும் கைகோர்த்து, கார்ப்ரேட் வில்லனைப் பந்தாடுவதே இதன் கதைக்களம்.

சூப்பர் ஹீரோ, சயின்டிஸ்ட் வில்லன் என பேன்டஸி திரைப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Live – ManoramaMAX

Live

போலியான செய்திகள் மற்றும் சைபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அன்னா, அமலா இருவரும் மீடியா மாஃபியாக்களுக்கு எதிராகப் போராடுவதுதான் இதன் கதைக்களம். வி.கே. பிரகாஷ் இயக்கத்தில் மம்தா மோகந்தா, எஸ்சௌபின் ஷாஹிர், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘ManoramaMAX’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Vimanam (தெலுங்கு) – Zee5

Vimanam

மாற்றுத்திறனாளியாக சக்கர நாற்காலியிலேயே இருக்கும் தந்தை, ‘விமானத்தில் பயணிக்க வேண்டும்’ என்ற தன் மகனின் கனவை நனவாக்கப் பாடுபடுவதுதான் இதன் கதைக்களம். சிவ பிரசாத் யானாலா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் ஜூன் 9ம் தேதி தெலுங்கு/தமிழ் இரண்டு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Afwaah (இந்தி) –  Netflix

Afwaah

சமூக வலைதளங்களில் வைரலான வதந்தியால் வாழ்க்கையே சீரழிந்த பிரச்னையிலிருந்து கதாநாயகன் எப்படி மீண்டார் என்பதே இதன் கதைக்களம். சுதிர் மிஸ்ரா இயக்கத்தில் பூமி பெட்னேகர், நவாசுதீன் சித்திக், சுமீத் வியாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த திர்ல்லர் திரைப்படமான இது தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Lakadbaggha (இந்தி) – Zee5

Lakadbaggha

விக்டர் முகர்ஜி இயக்கத்தில் அன்ஷுமன் ஜா, ரித்தி டோக்ரா, பரேஷ் பஹுஜா உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த காமெடி, ஆக்‌ஷன் கலந்த திரைப்படம் இது இத்திரைப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நாய்களை கடத்தி விற்கும் கும்பலை கண்டுபிடித்து நாய்களை காப்பாற்றுவதே இதன் கதைக்களம்.

Nobody (English) – Netflix

Nobody

இல்யா நைஷுல்லர் இயக்கத்தில் பாப் ஓடென்கிர்க், அலெக்ஸி செரிப்ரியாகோவ், கோனி நீல்சன் நடிப்பில் 2021-ல் வெளியான ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படம் ‘Nobody’. 

குடும்பததைப் பார்த்துக்கொள்ளும் சாதரண நபராக இருக்கும் கதாநாயகன் தன் குடும்ம்பத்தையும் பாதுக்காக்கவும், தனக்கு வரும் பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி ஆக்‌ஷனில் இறங்குவதே இதன் கதைக்களம். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘ Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Last Night in Soho (English) – Netflix

Last Night in Soho

ஒரு ஆர்வமுள்ள ஆடை வடிவமைப்பாளர் மர்மமான முறையில் 1960 களில் ஒரு திகைப்பூட்டும் பாடகியை சந்திக்கிறார். அதன் பிறகு இருவரும் சந்திக்கும் பிரச்னைகள்தான் இதன் கதைக்களம். எட்கர் ரைட் இயக்கத்தில் தாமசின் மெக்கென்சி, அன்யா டெய்லர்-ஜாய், மாட் ஸ்மித் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘Last Night in Soho’. இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.