ஹர்திக் பாண்டியா கேப்டனான பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாத இளம் வீரர்

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு காயம் காரணமாக நீண்ட காலம் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. பின்னர் அணிக்கு திரும்பிய அவர், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் முத்திரை பதித்தார். அதனால் அவருக்கு 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பும் தேடி வந்தது. அந்த பொறுப்பை பாண்டியா ஏற்றது முதல் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரால் இந்திய அணியில் விளையாடவே முடியவில்லை.  அவர் யார் என்றால் வெங்கடேஷ் ஐயர் தான்.

ஹர்திக் பாண்டியா காயம்

டி20 உலகக் கோப்பை 2021க்குப் பிறகு, ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சைக்கு சென்ற அவர், நீண்ட காலம் இந்தியஅணிக்கு திரும்பவில்லை. அவருக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகமானார். தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடி வந்த அவரால் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு வந்த பிறகு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டார். 14 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர், 28.86 சராசரி மற்றும் 145.85 ஸ்ட்ரைக் ரேட்டில் 404 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் தனக்கு ஏன் இடம் கிடைக்கவில்லை என்பதை ஐயர் சமீபத்தில் தெரிவித்தார். ஸ்போர்ட்கீடாவிடம் பேசிய ஐயர், ‘ஹர்திக் பாண்டியாவுக்கு திறமை இருக்கிறது, இந்தியா-11ல் நான் இடம் பிடிக்க வேண்டுமானால்,  ஹர்திக் பாண்டியாவை விட இரண்டு மடங்கு சிறப்பாக இருக்க வேண்டும். அதற்காக நான் கடினமாக உழைக்கிறேன் என தெரிவித்தார்.

இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர்

இந்திய அணிக்காக வெங்கடேஷ் ஐயர் 9 டி20 போட்டிகளில் 133 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் 2022க்குப் பிறகு தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அவர் ஒரு முறை கூட விளையாடும் 11-ல் சேர்க்கப்படவில்லை. மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.