ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாகவே இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்தது. அண்மையில் இதன் படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்தனர் படக்குழுவினர். இந்நிலையில் இந்தப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீசான இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ஆனாலும் ‘அண்ணாத்த’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிறுத்தை சிவாவின் வீட்டுக்கே நேரிடையாக விசிட் அடித்தார் ரஜினி.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனையடுத்து யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பினை நெல்சனுக்கு வழங்கினார் ரஜினி. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற டார்க் காமெடி படங்களை இயக்கிய நெல்சனுடன் ரஜினி கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
ஆனால் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘பீஸ்ட்’ படம் ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தது. பாக்ஸ் ஆபிசிலும் இந்தப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதனால் ‘ஜெயிலர்’ படத்தை வெறித்தனமாக இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
Tamanna: படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்க்கும்போது.. ஓபனாக பேசிய நடிகை தமன்னா.!
இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ள ட்வீட்டில், பாட்டு தர்ரேன்னு சொல்லிருந்தீங்க என்ற நெல்சன் கேட்பதை போட்டும், அனிருத் பதிலுக்கு லுக் விடுவதை போன்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர். மேலும், இந்தப்படத்தில் கன்னட பிரபலம் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் நடிக்கின்றனர். ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leo: ‘லியோ’ பற்றி சூப்பரான மேட்டர் சொன்ன கெளதம் மேனன்: வெயிட்டான சம்பவம் போல..!