வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத் கலவர வழக்கில் உச்சநீதிமன்றத்தால் இடைக்கால ஜாமின் பெற்ற பெண் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டிற்கு குஜராத் ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்து அவரை கோர்ட்டில் சரணடய உத்தரவிட்டது.
2002 குஜராத் கலவரம் தொடர்பாக பொய் வழக்குகள் தொடர்ந்ததாக பெண் சமூக சேவகர் டீஸ்டா செதல்வாட் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை செசன்ஸ் மற்றும் குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவரது அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பரில் நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது.
ஜாமினில் உள்ள நிலையில் தனக்கு மீண்டும் ஜாமின் கோரி செதல்வாட் குஜராத் ஐகோர்ட்டில் ஜூன் மாதம் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி நிர்சார் தேசாய் விசாரணை நடத்தினர்.
குஜராத் அரசு தரப்பு வழக்கறிஞர் , டீஸ்டாவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வழக்கின் முக்கிய ஆதாரங்களை சிதைத்துவிடுவார் என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி டீஸ்டா செதல்வாட் உடனடியாக சரணடைய உத்தரவிட்டார். உத்தரவை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று டீஸ்டாவின் வழக்கறிஞர் வலியுறுத்தினார். இதற்கு நீதிபதி மறுத்தார்.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
குஜராத் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து டீஸ்டா செதல்வாட், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இன்று நடந்த விசாரணையில், இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் அரசியல் சாசன 3 நீதிபதிகள் கொண்ட தலைமையிலான பெஞ்சிற்கு பரிந்துரைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement