இந்தியா வல்லரசாக இருந்தால், பாகிஸ்தானும் சளைத்ததில்லை! சீறும் இம்ரான் கான்

புதுடெல்லி: ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடரில் பிசிசிஐ மற்றும் பிசிபி பங்கேற்கும் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பைக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்ததால் பிசிசிஐயும் பிசிபியும் நேருக்கு நேர் மோதின.

பல பரபரப்புகளுக்குப் பிறகு, இரு வாரியங்களும் ஆசிய கோப்பை 2023இல், கலப்பின மாதிரியில் விளையாட ஒப்புக்கொண்டன, அங்கு முதல் நான்கு போட்டிகள் பாகிஸ்தானில் விளையாடப்படும், கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது கட்டமாக, 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. 

இந்த ஹைப்ரிட் மாடலை பிசிசிஐ ஏற்றுக்கொண்டதால், ஒருநாள் உலகக் கோப்பையில் கலந்துக் கொள்ள இந்தியா வருவதற்கு பாகிஸ்தான் அணி ஒப்புக்கொண்டது. 

முன்னதாக, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ மறுத்ததால், சிக்கல் உண்டானது. ஆனால், தற்போது ஒரு இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார்.

ஆசிய கோப்பையை இந்தியா இல்லாமல் பாகிஸ்தானில் நடத்தியிருக்க வேண்டும் என்று இம்ரான் கான் கூறினார். உலகக் கோப்பைக்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செல்வதற்கு பாகிஸ்தான் மறுத்திருக்க வேண்டும் என்று கான் கூறினார்.

Imran Khan stance on Asia cup and wc venue debate pic.twitter.com/GDN0HT91qw

— Pakiza Amir(@amir_pakiza) July 1, 2023

“இந்தியா இல்லாவிட்டாலும், முழு ஆசியக் கோப்பையையும் பாகிஸ்தானில் நடத்தியிருப்பேன். இந்தியா பாகிஸ்தானுக்கு வரத் தயாராக இல்லை என்றால், பாகிஸ்தான் ஏன் உலகக் கோப்பையில் விளையாட இந்தியாவுக்குச் செல்ல வேண்டும்? இந்தியா வல்லரசாக இருந்தால், பாகிஸ்தானும் முன்னணி மற்றும் அதிகம் பின்பற்றப்படும் கிரிக்கெட் அணி என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று இம்ரான் கான் தெரிவித்தார்.

இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணி ஒரே பிரிவில் இடம்பெறும். கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் ஆசியக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதியபோது ஆடம் விறுவிறுப்பாக இருந்தது. இருஅணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. 

2022 டி20 ஆசிய கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அக்டோபர் 15ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான்

இதற்கிடையில், ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை இந்த வார தொடக்கத்தில் ஐசிசி அறிவித்தது. அக்டோபர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதற்கு முன், அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா களம் இறங்கும்.

அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், இந்தியா – பாகிஸ்தான் அணிக்கு இடையிலான போட்டி நடைபெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.