Dhanush: தனுஷ், அமலா பால் உட்பட 14 பேருக்கு ரெட் கார்டு… பரபரக்கும் கோலிவுட்… அடுத்தது என்ன..?

சென்னை: 14 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.

சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகியோர் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சொல்லப்படுகிறது.

தற்போது அவர்களுடன் தனுஷ், அமலா பால் உள்ளிட்ட மொத்தம் 14 நடிகர்கள் மீது புகார் எழுந்துள்ளதாம்.

இதுகுறித்து நடிகர் சங்கத்திடம் தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷ், அமலா பால் உட்பட 14 நடிகர்களுக்கு ரெட் கார்டு: கோடிகளில் பிஸினஸ் நடைபெறும் துறைகளில் திரையுலகமும் முக்கியமானது. பல கோடிகள் புழங்கும் கோலிவுட்டில் நடிகர்களின் கால்ஷீட், சம்பளம் குறித்து அடிக்கடி பிரச்சினைகள் எழுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் மீட்டிங் நடைபெற்றது.

தேனாண்டாள் முரளி தலைமையில் நடைபெற்ற இந்த மீட்டிங்கில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு கால்ஷீட் கொடுக்காத நடிகர்கள் மீது ரெட் கார்டு விதிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளதாம். அதன்படி இந்த லிஸ்ட்டில் சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகியோரின் பெயர்கள் முதலில் இடம்பெற்றன.

இந்த லிஸ்ட் தற்போது 14 பேர் என்றளவில் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இதில் தனுஷ், நடிகைகள் அமலாபால், லட்சுமி ராய் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த 14 பேரிடமும் விளக்கம் கேட்டு ஒரு வாரத்திற்குள் பதில் அளிப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்களாம். அதன்பின்னரே குறிப்பிட்ட இந்த நடிகர்கள், நடிகைகளுக்கு ரெட் கார்டு விதிப்பது குறித்து தெரிய வரும்.

 Dhanush: The Producers Association has decided to give red card to 14 Actors including Dhanush, Amala Pal

இதனிடையே நடிகர், நடிகைகள் அவர்களுக்காக நியமிக்கும் பவுன்சர்களுக்கு தயாரிப்பாளர்கள் சார்பில் சம்பளம் வழங்கப்படாது எனவும் முடிவெடுத்துள்ளார்களாம். இனிமேல் பவுன்சர்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளே சம்பளம் கொடுத்துக்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்களாம். அதேபோல் மேக்கப் மேன் குறித்தும் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது, நடிகர் நடிகைகளின் மேக்கப் மேன் உள்ளிட்ட உதவியாளர்கள் பெப்ஸியில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளார்களாம். அப்படியில்லாமல் வெளியில் இருந்து உதவியாளர்களை அழைத்து வந்தால் அதற்கும் நடிகர்கள், நடிகைகளே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார்களாம்.

அதுமட்டும் இல்லாமல் நடிகர், நடிகைகளின் சம்பளம் விஷயத்திலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி ஒரு படத்தில் கமிட்டாகும் போது 10% மட்டுமே அட்வான்ஸ் வழங்கப்படும், படப்பிடிப்பில் இருந்து டப்பிங் வரை 60% தொகை சம்பளம் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இறுதியாக படம் ரிலீஸாகும் முன்பு மீதமிருக்கும் 30% சம்பளம் வழங்கப்படும் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.