தயாரான நெல்லையப்பர் தேர்|மூங்கில் குழலில் ஒளிரும் விளக்குகள்|சனிப்பிரதோஷ வழிபாடு-News in Photos July 1, 2023 by விகடன் கன்னியாகுமரி: நாகர்கோவில் கோதைக்கிராமம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் நந்திஸ்வரர் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமரி: நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கைவினைப்பொருட்கள் அங்காடியில் புதுமையான வடிவில் காணப்படும் ஒளிரும் மூங்கில் குழல் விளக்குகள். திருநெல்வேலி: நெல்லைப்பர் கோயில் ஆனிதேர்திருவிழாவை முன்னிட்டு வடங்கள் அமைத்து தயாரான நெல்லையப்பர் தேர். சேலம்: எடப்பாடி தொகுதியில் உள்ள பெரிய சோர்கையில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. புதுச்சேரி: புதிய டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். புதுச்சேரி: பர்கூர் அருள்மிகு மூலநாத சுவாமி கோயில் தேர் திருவிழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம். ஈரோடு: தேசிய மருத்துவர் தினத்தையொட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். ஈரோடு: கோடை வெயிலின் தாக்கத்தால் காலிங்கராயன் வாய்க்காலில் உற்சாக குளியலிடும் சிறுவர்கள். ஈரோடு: கோபிசெட்டிபாளையம் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற ‘நான் முதல்வன் உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா. விருதுநகர்: கொலை வழக்கில் கைதான வரிச்சியூர் செல்வத்தை போலீஸ் காவலில் இருந்து கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார். விருதுநகர்: அருப்புக்கோட்டை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம் நிகழ்ச்சி. வேலூர்: சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நந்தீஸ்வரர் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு சென்னை: அ.தி.மு.க.(ஓ.பி.எஸ் அணி) பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ் தலைமையில் சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம். புதுச்சேரி: தேசிய மருத்துவர் தின விழாவை முன்னிட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை மருத்துவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார் Source link