எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரித்து 328 ருபாவாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95, லீற்றரின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 365 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 346 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
டீசல் ஒரு லீற்றர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 308 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 236 ரூபாவாகவும் திருத்தப்பட்டுள்ளது.