Video Shows Cop Pouring Water On People Sleeping On Railway Platform, Official Responds | ரயில்வே பிளாட்பார்மில் தூங்கியவர்கள் மீது தண்ணீர் ஊற்றிய போலீஸ்: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புனே: புனே ரயில் நிலைய பிளாட்பார்மில் தூங்கியவர்கள் மீது போலீஸ்காரர் ஒருவர் தண்ணீரை ஊற்றி எழுப்பினார்.

ரயில்வே போலீஸ் படையை சேர்ந்த அதிகாரி ஒருவர், கையில் தண்ணீர் நிரப்பிய பாட்டீல் கொண்டு வந்தார். பிளாட்பார்மில் தூங்கி கொண்டிருந்த நபர்களின் முகத்தில் தண்ணீரை ஊற்றி அவர்களை எழுந்து போகச் சொன்னார். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டனர். தூக்கம் பாதியில் கெட்ட நிலையில் அவர்கள் எதுவும் செய்வது அறியாது சிறிது நேரம் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர்.

இதனை சிலர் மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவ துவங்கியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் போலீசையும், ரயில்வேயையும் விமர்சிக்க துவங்கினர்.

இதனையடுத்து இந்த விவகாரம், புனே டிவிஷனல் ரயில்வே மேலாளரின் கவனத்திற்கு சென்றது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ரயில்வே பிளாட்பார்மில் தூங்கினால், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும். அதற்காக பயணிகளிடம், போலீஸ் நடந்து கொண்ட விதம் சரியானது அல்ல. இந்த நிகழ்வு வருந்தத்தக்கது. பயணிகளிடம் மரியாதையாகவும், அமைதியுடனும் நடந்து கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட போலீஸ் அறிவுறுத்தப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.