West Indies Out Of World Cup 2023: ஜிம்பாப்வேயில் நடந்து வரும் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்த மேற்கு இந்திய தீவுகள், இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறத் தவறிவிட்டது.
தற்போது நடைபெற்று வரும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு குரூப்பில் முதல் இடத்தை பிடிப்பவர்கள் தான் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறுவார்கள். அந்த வகையில், தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இடத்திற்கு இனி வர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு இந்திய தீவுகள் 1975 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல் இரண்டு உலகக் கோப்பை தொடர்களின் சாம்பியன்களாகவும், 1983 தொடரில் இந்திய அணியிடம் தோல்வியடைந்து மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டாம் இடத்தை பிடித்தனர். இந்நிலையில், உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பில் மேற்கு இந்திய தீவுகள் இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமளித்துள்ளது. அந்த அணி, உலகக்கோப்பை தொடரில் இடம்பெறாதது இதுவே முதல் முறையாகும்.
மேற்கிந்தியத் தீவுகள் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற முடியாததால் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டியிருந்தது. ஏனெனில் அவர்கள் ஓடிஐ சூப்பர் லீக்கில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தனர். மேலும் பத்து அணிகள் கொண்ட போட்டியில் முதல் எட்டு அணிகள் மட்டுமே நேரடியாக நுழைகின்றன.
எனவே, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் தகுதிச் சுற்றில் குரூப் ‘ஏ’-வில் மேற்கு இந்திய தீவுகள் இருந்தனர். அதுபோல், குரூப் ‘பி’-யும் இருந்தது. இந்த இரண்டு குரூப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகள் தற்போதைய சூப்பர் சிக்ஸ் தொடருக்கு தகுதிபெற்றனர். குரூப் ஏ-வில் மேற்கு இந்திய தீவுகள் மூன்றாவது இடத்தை பிடித்தது.
மேற்கிந்தியத் தீவுகள் தகுதிச் சுற்றில் அமெரிக்கா மற்றும் நேபாளத்திற்கு எதிரான வெற்றிகளுடன் தொடங்கியது. ஆனால் பின்னர் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்திடம் தோற்றது. எனவே அவர்கள் சூப்பர் சிக்ஸுக்கு தகுதி பெற்றபோது, அந்தச் சுற்றில் அவர்கள் பூஜ்ஜிய புள்ளிகளைப் பெற்றனர். அதே நேரத்தில் ஜிம்பாப்வே நான்கு புள்ளிகளையும் நெதர்லாந்து இரண்டு புள்ளிகளையும் கொண்டு சென்றது. குரூப் ‘பி’-யில் இருந்து, இலங்கை நான்கு புள்ளிகளுடன் சுப்பர் சிக்ஸ் சுற்ருக்கு தகுதி பெற்றது. ஸ்காட்லாந்து இரண்டு புள்ளிகளுடன், ஓமன் பூஜ்யம் புள்ளிகளுடன் வந்தது.
ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் தங்களது முதல் சூப்பர் சிக்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்று, தலா 6 புள்ளிகளாகப் பெற்றன. ஸ்காட்லாந்து, இலங்கை மற்றும் ஓமன் ஆகிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜிம்பாப்வே அல்லது இலங்கையை வீழ்த்த வாய்ப்பு உள்ளது. ஆனால் ஸ்காட்லாந்திடம் தோல்வியுற்றால், மேற்கிந்தியத் தீவுகள் அதிகபட்சமாக நான்கு புள்ளிகளைப் பெறலாம் – இந்தியாவல் நடக்கும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெற தேவையான முதல் இரண்டு இடங்களுக்கு அது போதுமானதாக இருக்கிறது.
இந்த பின்னடைவு லிமட்டட் ஓவர்கள் வடிவத்தில் மேற்கிந்திய தீவுகளின் வீழ்ச்சியின் தொடர்ச்சியாகும். அவர்கள் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஓடிஐ உலகக் கோப்பையில், உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று மட்டுமே நுழைந்தனர். அங்கு அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் தற்செயலாக ஸ்காட்லாந்தின் இழப்பால் தகுதிபெற்று நுழைந்தனர்.
ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 கட்டத்திற்கு அவர்கள் தகுதி பெறவில்லை. அவர்கள் தங்கள் குரூப் ஆட்டங்களில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒரே ஒரு வெற்றியையும், இரண்டு (ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்திடம்) தோல்வியையும் பெற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.