சென்னை:
மாமன்னன் திரைப்படம் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், பதற்றத்தையும் நினைவுப்படுத்தியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்
தெரிவித்துள்ளார்.
மாமன்னன் படம் எப்படி இருக்கு ?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர்
, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்தை திருமாவளவன் இன்று திரையரங்குக்கு சென்று பார்த்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. மிக துணிச்சலாக இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரித்தும் நடித்தும் வெளியிட்டிருக்கும் நமது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நான் நெஞ்சார பாராட்டுகிறேன். சனாதனத்தின் அடிப்படை கூறாக இருக்கின்ற சாதி பாகுபாட்டினை, மாமன்னன் திரைப்படத்தின் அடிப்படை கூறாக மாரி செல்வராஜ் எடுத்திருக்கிறார்.
ஒருபுறம் சாதி வெறியை எதிர்த்தும், மறுபுறம் சமூக நீதி அரசியலை ஆதரித்தும் திரைக்கதை நகர்கிறது. சாதி வெறியை சமூக நீதி வீழ்த்தி வெற்றி பெறும் என்பதை இந்த திரைப்படத்தின் ஊடாக நிரூபித்திருக்கிறார் மாரி செல்வராஜ். சமூக நீதி போராட்டம் எவ்வளவு கடினமானது? ரத்தம் சிந்தும் போராட்டமாக எப்படி இது இருக்கிறது என்பதை மிக தத்ரூபமாக சொல்லி இருக்கிறார். “உன் அப்பாவை நிற்க வைப்பது எங்கள் சமூகத்தின் அடையாளம்; உன்னை உட்கார சொல்வது எங்கள் அரசியல்” என்று வில்லன் பேசுவது தற்போது பல இடங்களில் நடந்து கொண்டிருப்பதை நம் கண் முன்னே காட்டுகிறது.
தன் தந்தையை பிறருக்கு சமமாக உட்கார வைக்க ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கிறது என்பதை இந்த படம் அருமையாக சொல்கிறது. சாதி இந்துக்களாக எல்லோரும் மாறிவிடக் கூடாது; சொந்த சாதி அடையாளங்களை உதறிவிட்டு, மாமன்னனுக்கு ஆதரவு தரும் வகையில் சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெளியே வரும் காட்சி ஒரு முக்கியமான புள்ளி. இதுதான் சமூகத்தில் நிலவ வேண்டும்.
இந்த திரைப்படத்தில் வரும் நட்சத்திர சின்னம், வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படும் பின்னடைவு, அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பிறகு மாமன்னன் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்படுவது ஆகியவை 2019-இல் எனது தொகுதியான சிதம்பரத்தில் ஏற்பட்ட பதற்றத்தை நினைவுப்படுத்தியது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.