சென்னை: நடிகை ஜான்வி கபூர் பூவை வைத்து மறைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவிற்கு மோசமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தின் தென்பகுதியை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி, இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் தம்பதிகளுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.
நடிகை ஜான்வி கபூர்: அம்மா போலவே சினிமா மீது ஆர்வம் கொண்ட ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
NTR 30: மேலும், ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய 30-வது படத்தை பிரபல இயக்குனர் கொரட்டல சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதியானது. இப்படத்தில் ஜூனியர் என் டி-ஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அகில் அக்கினேனிக்கு ஜோடியாக: மேலும் நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் நடிகர் அகில் அக்கினேனி ஏஜென்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரிய பொருட்செலவில் உருவான இப்படம் பெரும் தோல்வியைத் சந்தித்தது. தற்போது அனில் குமார் இயக்குநர் தீரா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தில் கமிட்டாக உள்ளார். இந்த படத்தில் அகிலுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிரஸ் போட்டிருக்கீங்களா இல்லையா? படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தாலும், சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். பேக்லெஸ் கோல்டன் கவுனை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார். அவருடன் ஜான்வியும் கேமராக்கு போஸ் கொடுத்தார். ஆனால், அந்த கவுனே தெரியாத அளவிற்கு கையில் பூ வை வைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் டிரஸ் போட்டிருக்கீங்களா இல்லையா? என கேட்டு வருகின்றனர்