ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ரஜினியுடன் இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் படத்தின் போஸ்டர்கள், கிலிம்ப்ஸ் வீடியோ என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்க படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பலமடங்கு உயர்ந்தது.
ஜெயிலர் அப்டேட்
இந்நிலையில் இப்படத்தின் கதை பற்றி இணையத்தில் பல தகவல்கள் வருகின்றன. அதாவது ஜெயிலர் படத்தில் ரஜினி ஜெய்லராக நடிப்பதாகவும், ஜெயிலில் இருந்து தப்பிக்க நினைக்கும் கைதிகளை ரஜினி எவ்வாறு தடுத்து நிறுத்துகிறார் என்பது தான் ஜெயிலர் படத்தின் கதைக்கரு என்றும் ஒரு தகவல் வந்தது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
Maamannan: மாமன்னன் மூலம் வடிவேலுவுக்கு அடித்த ஜாக்பாட்..திட்டம் போட்டு காய் நகர்த்திய வைகைப்புயல்..!
இது ஒருபக்கம் இருக்க ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர்கள் படத்தை பற்றி பல தகவல்களை கூறி வருகின்றனர். அதாவது இதுவரை ரஜினி நடித்த படங்களிலேயே ஜெயிலர் திரைப்படம் மிகவும் வித்யாசமாக இருக்கும் என்றும், இப்படம் ஆக்ஷன் கலந்த டார்க் காமெடி படமாக இருக்கும் என்றும் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் யோகி பாபு, ஜெயிலர் படத்தில் நான் ரஜினியுடன் இணைந்து பல காட்சிகளில் நடித்துள்ளேன். அக்கட்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்றார். இந்நிலையில் இதுவரை ஜெயிலர் படத்தின் தகவல்களை வைத்தும், நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் ஜெயிலர் படத்தை பற்றி சொல்வதை வைத்தும் ரசிகர்களே விமர்சனங்களை எழுதி வருகின்றனர்.
வெளியான விமர்சனம்
மேலும் ரஜினி ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு நெல்சனை புகழ்ந்து தள்ளியதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில் ஜெயிலர் திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதாவது ஜெயிலர் படத்தின் முதல் பாடல் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கின்றதாம். இதன் அறிவிப்பு தான் நாளை வெளியாகவுள்ளதாக தெரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.