ஹைதராபாத்: குண்டூர் காரம் படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு அடுத்ததாக இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் அந்த படம் ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நான் ஈ, மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என ராஜமெளலி இயக்கும் ஒவ்வொரு படங்களும் பிரம்மாண்டத்தின் உச்சமாகவும் இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவே வியந்து பார்க்கும் படங்களாக மாறி வருகின்றன.
ஆர்ஆர்ஆர் படம் கோல்டன் குளோப், ஆஸ்கர் உள்ளிட்ட மேடைகளில் கெத்தாக விருதுகளையும் வாங்கி அசத்திய நிலையில், அடுத்ததாக மகேஷ் பாபு மற்றும் ராஜமெளலி இணையும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
ஹீரோ செம ஃபிட்டாக இருக்கணும்: ராஜமெளலி படங்களில் நடிக்க வேண்டுமென்றால் ஹீரோவின் சட்டை இல்லாத உடலே முக்கியமான சீனில் நடிக்க வேண்டும் என்பதால், ரொம்பவே ஃபிட்டான உடல் கட்டமைப்பு ரொம்ப அவசியம் என்பதை கவனமுடன் ஒவ்வொரு படங்களிலும் கையாண்டு வருகிறார்.
இந்நிலையில், ராஜமெளலி இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார் என்பதால், தொடர்ந்து ஜிம்மே கதியென மனுஷன் கிடந்து கடினமாக உடற்பயிற்சி செய்து தனது பாடியை சிக்ஸ் பேக்கிற்கு கொண்டு வர தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
ஓடவிட்ட ராஜமெளலி: இதற்கு முன்பெல்லாம் மகேஷ் பாபு சும்மா வந்து நின்னாலே தியேட்டர் பட்டாஸாக வெடிக்கும் பாக்ஸ் ஆபிஸ் கல்லா கட்டும். ஆனால், இது மகேஷ் பாபு படம் என்பதையும் தாண்டி ராஜமெளலி படம் என்பதால் அந்த படத்திற்கு தேவையான ஹீரோவாக மகேஷ் பாபு மாறி வரவேண்டும் என்கிற உத்தரவை ராஜமெளலி போட்டுள்ளதால், கடுமையாக திரெட் மில்லில் ஓடி தனது உடல் அமைப்பை சீராக மாற்றி வருகிறார் மகேஷ் பாபு.
அதற்காக வேறலெவல் வொர்க்கவுட் செய்வது, ரன்னிங், வெயிட் லிஃப்டிங் என ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை தற்போது மகேஷ் பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மகேஷ் பாபு இப்படி வொர்க்கவுட் செய்து வருவதை பார்த்த அவரது ரசிகர்களும் ஜிம்முக்கு கிளம்பிச் செல்ல ஆரம்பித்து விட்டனர். பாகுபலி படத்தில் பிரபாஸ், ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் சிக்ஸ் பேக் வைத்து நடித்தது போல காடு சம்பந்தமான ராஜமெளலியின் அடுத்த படத்தில் மகேஷ் பாபுவும் சிக்ஸ்பேக் உடம்பை காட்டி ரசிகர்களை திணறவிடப் போவது கன்ஃபார்ம்.