நைரோபி,-கென்யாவில் போக்கு வரத்து நிறைந்த பகுதியில் சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மற்றும் அங்கிருந்த வியாபாரிகள் மீது லாரி மோதியதில், 51 பேர் பலியாகினர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ளது, ரிப்ட் பள்ளத்தாக்கு நகரமான லாண்டியானி. வர்த்தகம் அதிக அளவில் நடக்கும் இப்பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன.
சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பு என்பதால், இப்பகுதி எப்போதும் வாகனங்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும்.
நெரிசல் நிறைந்த சாலையில் நேற்று வேகமாக வந்த லாரி ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மினி பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் வாகனங்கள் மற்றும் சாலையோரம் இருந்த, 51 பேர் பரிதாபமாக பலியாகினர்; படுகாயங்களுடன் போராடிய 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement