விளையாட்டு உலகில் மூத்த வீரர் ஒருவர் மீதான பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10,000க்கும் மேற்பட்ட பெண்களுடன் தான் உறவு வைத்திருந்ததாக விளையாட்டு வீரர் கூறியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மான்செஸ்டர் சிட்டி வீரர் மீது பலாத்கார, வன்முறை குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. யார் இந்த வீரர்?
மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி,பெரிய வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக உள்ளனர். ஆடம்பர வாழ்க்கை வாழும் அவர், இலட்சக்கணக்கானவர்களின் ஆதர்ச நாயகன். ரசிகர்கள் அவரைப் போலவே இருக்க விரும்புகிறார்கள். ஆனால், இந்த பிரபலம் இனி அவருக்கு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெஞ்சமின் மெண்டியின் பாலியல் சுரண்டல்கள் வெளிவரும்போது, விளையாட்டு வீரர் பல சங்கடங்களை எதிர்கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டார். விளையாட்டு உலகில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கால்பந்து வீரர், 10000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக கூறியிருக்கும் நிலையில், அவர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டும் உள்ளது வியப்பாக இருக்கிறது.
பலாத்காரம் மற்றும் கற்பழிப்பு முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கால்பந்து வீரர் மெண்டி மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். இந்த வழக்கில், பெஞ்சமின் மென்டி 10,000 பெண்களுடன் உறவு வைத்திருப்பதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.
10 ஆயிரம் பெண்களுடன் உடலுறவு
மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியுடனான விளையாட்டு வீரர் மெண்டியின் ஒப்பந்தம் சனிக்கிழமையுடன் (2023, ஜூலை 1) காலாவதியானது. 2020 அக்டோபரில் செஷையரில் உள்ள மோட்ரம் செயின்ட் ஆண்ட்ரூவில் உள்ள தனது மாளிகையில், 24 வயது பெண்ணிடம் முறைகேடாக நடந்துக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிபிசி மற்றும் தி கார்டியன் செய்திகளின்படி, மெண்டி அந்த இளம் பெண்ணை கற்பழித்துள்ளார். அந்தப் பெண்ணை, தனது வழிக்கு கொண்டு வர முயன்றபோது, ‘பரவாயில்லை, நான் 10,000 பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளேன்’ என்று மெண்டி கூறியதாக, அவர் மீதான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு பாலியல் குற்றச்சாட்டு
பிரான்சு அணி 2018 ஆம் ஆண்டில், கால்பந்து உலகக் கோப்பை வென்றபோது, அந்த அணியில் மெண்டியும் முக்கிய வீரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது மற்றுமொரு பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாடை முன்வைத்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் நடந்த கடைசி விசாரணையின் போது, இரண்டு வெவ்வேறு பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் ஜூரிகளால், எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஜனவரி மாதம் விசாரணை முடிவடைந்த பிறகு, செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தின் நீதிபதி, ஆறு பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் அடங்கிய நடுவர் மன்றத்திடம், மற்றுமொரு பாலியல் பலாத்கார குற்றஞ்சாட்டில் மெண்டி குற்றவாளி இல்லை என்று கூறினார்.
தற்போது கால்பந்து வீரர் மெண்டி மீதான விசாரணை தொடர்கிறது, இந்த விசாரணை மூன்று வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2017 இல் பிரெஞ்சு கிளப்பான மொனாக்கோவில் இருந்து மான்செஸ்டர் சிட்டியில் சேர்ந்த மெண்டி இப்போது எந்தவொரு கால்பந்து அணியிலும் இணைந்திருக்கவில்லை. அவர், மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 75 போட்டிகளில் விளையாடியுள்ளார்.