ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மாமன்னனின் எதிர்பார்ப்புஉதயநிதியின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் மாமன்னன். இப்படம் துவங்கிய போதே இதுதான் உதயநிதியின் கடைசி திரைப்படமாக இருக்கும் என செய்திகள் வந்தன. அதைப்போல உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இதுவே தன் கடைசி படம் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்தனர். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இவ்வாறு இப்படம் மிகப்பிரமாண்டமாக உருவானதால் ரசிகர்கள் மத்தியில் மாமன்னன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது
சலசலப்புமாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரின் முன்பே மாரி செல்வராஜ் தேவர்மகன் படத்தை விமர்சனம் செய்தார். இதை கமல் எளிதாக எடுத்துக்கொண்டாலும் அவரது ரசிகர்கள் மாரி செல்வராஜை கடுமையாக கண்டித்தும் விமர்சித்தும் வந்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் ஒருபக்கம் மாமன்னன் திரைப்படத்திற்கு இது விளம்பரமாகவே அமைந்தது. இந்நிலையில் சமூகத்தளங்களில் இதைப்பற்றி பல விவாதங்கள் போய்க்கொண்டிருந்தன. ஆனாலும் கமல் மாமன்னன் படத்தை பார்த்து படக்குழுவை மனதார பாராட்டினார். இதையடுத்து இந்த சர்ச்சை மெல்ல மெல்ல ஓய்ந்தது
வரவேற்புஇந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாளில் மாமன்னன் திரைப்படம் வெளியானது. இபபடத்திற்கு இருந்த எதிர்பார்ப்பின் காரணமாக முதல் நாள் வசூல் மட்டும் கிட்டத்தட்ட பத்து கோடியை தாண்டியது. இது உதயநிதியின் திரைப்பயணத்திலேயே அதிக வசூலை ஈட்டிய படமாகும். இருந்தாலும் மாமன்னன் படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்களும் வந்துகொண்டு தான் இருந்தன. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி பொதுவான ரசிகர்களின் ஆதரவினால் மாமன்னன் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இந்நிலையில் உதயநிதியின் திரைப்பயணத்திலேயே மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
காஸ்ட்லி பரிசுமாமன்னன் படம் வெளியான இரண்டு நாட்களில் மொத்தம் 20 கோடிவரை வசூலித்துள்ளது. இதையடுத்து படம் வெளியான முதல் நாளே உதயநிதி பேசுகையில், இப்படம் நான் நினைத்ததை நிறைவேற்றிவிட்டது, நான் திருப்தியாக இருக்கின்றேன். எனவே இனி நான் படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறிவிட்டார். இந்நிலையில் மாமன்னன் படத்தின் வெற்றியினால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் உதயநிதி இப்படத்தின் சக்ஸட் மீட்டை நேற்று நடத்தினார். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் உதயநிதி. இந்த காரின் விலை மட்டும் கிட்டத்தட்ட 50 லட்சம் இருக்குமாம். இந்த தகவல் தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது