ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மாரி செல்வராஜ் செல்வராஜ் இயக்கத்தில்
உதயநிதி ஸ்டாலின்
, கீர்த்தி சுரேஷ், வைகைபுயல் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படம் பக்ரீத் பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸானது. உதயநிதி ஸ்டாலின் சொன்னது போன்றே இது மாரி செல்வராஜின் அரசியல் பற்றி பேசும் படமாக உள்ளது.
“Blue sattai மாறனே நல்லா இருக்குனு சொல்லிட்டார்” சரத்குமார் பேச்சு!
படத்தில் நடித்த யாரையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளனர். மாமன்னன் படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 5.50 கோடி முதல் ரூ. 6.50 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இரண்டாவது நாளில் ரூ. 4 கோடி வசூல் செய்திருக்கிறது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இன்று விடுமுறை நாள் என்பதால் மாமன்னன் படத்தின் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.
Maamannan collection: வசூல் மன்னனாக மாறிய மாமன்னன்: முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா!!!
அவருக்கு ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இது நயன்தாராவின் சம்பளத்தில் பாதி கூட இல்லையே என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் படம் ஒன்றுக்கு ரூ. 10 கோடி சம்பளம் வாங்குகிறார்கள். அப்படி இருக்கும்போது ஒரு ஹீரோவுக்கு வெறும் ரூ. 4 கோடி தான் சம்பளமா என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அமைச்சராக இருக்கும் அவர் முழு நேரம் மக்கள் பணி செய்ய இப்படியொரு முடிவு எடுத்துள்ளார். ஆனால் உதயநிதி ஸ்டாலினின் இந்த முடிவு அவரின் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
மாமன்னன் படம் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. படம் எப்படி இருக்கிறது என தெரிவித்த ரசிகர்கள், உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டதற்கு, வாய்ப்பில்ல ராஜா என கூறிவிட்டார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிக்க வருவார் என்றே நம்பப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.
முன்னதாக தயாரிப்பாளராக தமிழ் திரையுலகிற்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின். அப்பொழுது நான் படங்களில் நடிக்க மாட்டேன் என்றார். ஆனால் ஒரு சுபயோக சுபதினத்தில் நடிகராகிவிட்டார்.
நான் அரசியல் பக்கம் போகவே மாட்டேன் என காதல் மனைவியான கிருத்திகாவிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால் அரசியலுக்கு வந்து முதலில் எம்.எல்.ஏ. ஆனார். அதன் பிறகு அமைச்சராகிவிட்டார். வர மாட்டேன் என்று சொல்லி இரண்டு விஷயத்தை செய்துவிட்டார். அதனால் மீண்டும் நடிக்க வருவார் என்றே நம்பப்படுகிறது.
அப்படி அவர் மீண்டும் நடிக்க வந்தால் அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு மாரி செல்வராஜுக்கு தான் கிடைக்கும். இதை நாங்கள் சொல்லவில்லை, உதயநிதி ஸ்டாலினே சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.