மீண்டும் பாரன்சிக் இயக்குனர்களுடன் இணைந்த டொவினோ தாமஸ்
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பாரன்சிக். முழுக்க முழுக்க தடயவியல் துறையை பின்னணியாக கொண்டு விறுவிறுப்பான சைக்கோ திரில்லர் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். இந்த நிலையில் தற்போது இதே கூட்டணி ஐடென்டிட்டி என்கிற படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது.
சமீப காலமாக இவர்கள் கூட்டணி குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகர் டொவினோ தாமஸ் இதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாரன்சிக் படத்தைப் போல இதுவும் திரில்லர் ஜானரில் தான் உருவாக இருக்கிறதாம் இந்த படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.