சென்னை: தமிழகத்தில் உயர்கல்வித் துறைச் செயலர் உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தும், மகளிர் உரிமைத் தொகை திட்டம், கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்தும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் கே.இளம்பகவத், கூடுதல் பொறுப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக செயல்படுவார். ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் அர்ச்சனா பட்நாயக், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் (எம்ஆர்பி) தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனித்துக் கொள்வார். அதேபோல, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன், கூடுதல் பொறுப்பாக கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு அதிகாரியாக செயல்படுவார்.