Maamannan: டப்பிங் குயீனை இப்படியாக்கிட்டாரே மாரி செல்வராஜ்: மாமன்னன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவீணா

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Maamannan issue: சமூக வலைதளங்களில் பலரும் மாரி செல்வராஜை விமர்சிக்கும் நேரத்தில் ஒரு ட்வீட் போட்டு தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார் ரவீணா ரவி.

மாமன்னன்குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த ரவீணா ரவி பின்னர் டப்பிங் ஆர்டிஸ்டாக மாறினார். பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். இதற்கிடையே ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் ஹீரோயின் அவதாரமும் எடுத்தார். குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கிறார். இந்நிலையில் தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீஸான மாமன்னன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார் ரவீணா.சரத்குமார்​”Blue sattai மாறனே நல்லா இருக்குனு சொல்லிட்டார்” சரத்குமார் பேச்சு!​​ஃபஹத் மனைவி​உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் வில்லன் ஃபஹத் ஃபாசிலின் மனைவியாக நடித்தார் ரவீணா. படம் பார்த்தவர்களோ மாரி செல்வராஜை விமர்சிக்கிறார்கள். டப்பிங் குயீனான ரவீணாவை இப்படி ஒரு வசனம் கூட இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறாரே. இதுக்கு பெயர் தான் மாரி செல்வராஜின் குறும்பா என கேள்வி எழுப்பினார்கள்.
​ரவீணா ட்வீட்​சமூக வலைதளங்களில் பலரும் மாரி செல்வராஜிடம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் ரவீணா ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மாமன்னனில் நான் ஃபஹத் ஃபாசில் ஜோடியாக நடித்திருக்கிறேன். குறைந்த அளவு தான் ஸ்கிரீன் ஸ்பேஸ், வசனமே இல்லை. ஆனாலும் இது போன்ற ஒரு குழுவுடன் சேர்ந்து நடித்தது ஆசிர்வாதம் என்றார்.
மகிழ்ச்சி​​​ரசிகர்கள் வாழ்த்து​ரவீணாவின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, அவருக்கு வசனமே இல்லை. டப்பிங் யூனியனில் ஒரு புகார் அளிக்க வேண்டும் போன்று. இந்த வாய்ஸை போய் பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்களே. நீங்கள் மட்டும் கதவை பூட்டாமல் இருந்திருந்தால் முதல் பாதியிலேயே படம் முடிந்திருக்கும். வசனம் இல்லாவிட்டாலும் நச்சுனு நடித்திருக்கிறீர்கள் ரவீணா. வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளனர்.
​எடப்பாடி பழனிசாமி​Maamannan: மாமன்னனில் வந்த ஃபஹத் ஃபாசில் கேரக்டர் நிஜத்தில் எடப்பாடி பழனிசாமியா?: ரியாக்ட் செய்த உதயநிதி ஸ்டாலின்மாமன்னன் படம் குறித்து சமூக வலைதளத்தில் வேறு பேச்சும் போய்க் கொண்டிருக்கிறது. படத்தில் வந்த மாமன்னன் கதாபாத்திரம் முன்னாள் அதிமுக சபாநாயகர் தனபால் போன்று உள்ளது. அந்த நேரத்தில் மாவட்ட செயலளராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அப்படி என்றால் ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரம் எடப்பாடியை குறிக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

​கீதா கைலாசம்​மாமன்னன் படத்தில் எதுவும் பேசாமல் ரசிகர்களை கவர்ந்தார் ரவீணா ரவி. இதற்கிடையே வடிவேலுவின் மனைவியாக நடித்த கே. பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசமும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருக்கிறார். தன் முந்தைய படங்களில் அவருக்கு இந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அங்கீகாரம் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் கீதா.

​Maamannan:மாமன்னனில் வடிவேலு மனைவியாக நடித்தவர் பெரிய இடத்து மருமகள்னு தெரியுமா?​
​உதயநிதி ஸ்டாலின்​மாமன்னன் படம் ரிலீஸான அன்று ரூ. 5.50 கோடி முதல் ரூ. 6.50 கோடி வரை வசூல் செய்தது என தகவல் வெளியானது. இரண்டாவது நாளில் ரூ. 4 கோடி வசூலித்தது. இதையடுத்து மூன்றாவது நாளில் ரூ. 6 கோடி வசூலித்திருக்கிறது என கூறப்படுகிறது. இது உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதாலும் பலரும் தியேட்டருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் மாமன்னனின் வசூல் வேட்டை தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.

​Maamannan:மாமன்னனுக்காக உதய்ணாவுக்கு இவ்ளோ தான் சம்பளமா?!: இது நயன்தாரா சம்பளத்தில் பாதி கூட இல்லையே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.