"மூன்று என்ஜின் கொண்ட அரசு புல்லட் ரெயிலைப் போல இயங்கும்" – அஜித் பவார் பதவியேற்பு குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கருத்து

மும்பை,

மும்பை, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்தார் அஜித் பவார். இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர்.

இந்தநிலையில், சிவசேனா – பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், துணை முதல்-மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டது குறித்து அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

“இப்போது எங்களுக்கு 1 முதல் மந்திரி மற்றும் 2 துணை முதல் மந்திரிகள் உள்ளனர். இரட்டை என்ஜின் அரசாங்கம் இப்போது மூன்று இன்ஜினாக மாறியுள்ளது, இப்போது அது புல்லட் ரெயிலாக இயங்கும். மராட்டிய மாநிலத்தின் வளர்ச்சிக்காக, அஜித் பவாரையும் அவரது தலைவர்களையும் நான் வரவேற்கிறேன். என கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.