Maaveeran: சிவகார்த்திகேயனை பார்த்தா எனக்கு ரஜினி தான் ஞாபகத்திற்கு வராரு..புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-

​ எதிர்பார்ப்பில் மாவீரன்சிவகார்த்திகேயனின் நடிப்பில் அஸ்வினின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் மாவீரன். மண்டேலா என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய அஸ்வின் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்தது அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கடந்தாண்டு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. அந்த வகையில் முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியாவதாக இருந்த மாவீரன் திரைப்படம் தற்போது மாதம் 14 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது

​வித்யாசமான ஜானர்சமீபகாலமாக சிவகார்த்திகேயன் வித்யாசமான ஜானர்கள் கொண்ட படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் SK21 படத்தில் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். இப்படம் ஒரு வித்யாசமான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என பேசப்பட்டு வரும் நிலையில் மாவீரன் படத்திலும் வித்யாசமான ஜானரில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். பாண்டஸி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை வித்யாசமாக காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

​ட்ரைலர்ஜூலை 14 ஆம் தேதி மாவீரன் திரைப்படம் திரையில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. கதைக்களம் என்ன என்பதை முழுமையாக கணிக்கமுடியாத வகையில் மாவீரன் ட்ரைலர் இருந்தது. ஆனால் கண்டிப்பாக இப்படத்தில் ஏதேனும் வித்யாசமான ஒரு விஷயம் இருக்கும் என்ற நம்பிக்கை ட்ரைலரை பார்த்த பிறகு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று நடைபெற்ற மாவீரன் விழாவில் பேசிய படக்குழுவினர் படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு பற்றியும், கதைக்களம் பற்றியும் உயர்வாக பேசியதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல இயக்குனர் மிஸ்கின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினியின் ஞாபகம்இந்நிலையில் மாவீரன் படத்தில் புகழ்பெற்ற நாயகியான சரிதா முக்கியமான ரோலில் நடித்துள்ளார். நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய சரிதா , சிவகார்த்திகேயனை பார்த்தல் தனக்கு ரஜினி தான் ஞாபகத்திற்கு வருவதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, என் முதல் படம் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் தான் அமைந்தது. அவருடன் பல படங்களில் நடித்துள்ளேன். அதைத்தொடர்ந்து மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும்போது எனக்கு சிவகார்த்திகேயனை பார்த்தல் இளம் வயது ரஜினி தான் ஞாபகத்திற்கு வருகின்றார். எனவே சிவகார்த்திகேயனை நான் குட்டி R என தான் அழைப்பேன் என்றார் சரிதா. இந்நிலையில் சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்டு சரிதா பேசியதை அடுத்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.