திருப்பத்தூர்: வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டைக்கு வரப்போவதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், இன்றைய ரயில் பயணம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
மோடியின் கனவு திட்டம்: தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அரக்கோணம், ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், வந்தே பாரத் ரயிலும் அரக்கோணம் வழியாக இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டன. அதாவது, இதுவரை பயணிகள் இந்த ரயிலில் அமர்ந்து மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தது.
இப்போது, வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதிகள் கொண்டதாகவும், மின்சார ரயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக, வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணிகளும் ரயில்வே துறை சார்பில் துரிதமாகியும் வருகிறதாம்..
ஜோலார்பேட்டை: அதன்படி, அரக்கோணம்- ஜோலார் பேட்டை போன்ற நகரங்களை இணைக்கும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயணிகள் சேவைக்காக, இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கடந்த மாதமே நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
ஜோலார்பேட்டை: இந்நிலையில், ஜோலார்பேட்டை ரயில் சேவை குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.. அதாவது, ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் – ஜோலார்பேட்டை இடையே உள்ள ரெயில் தண்டவாளம் பராமரிப்பு பணி இன்று அதாவது திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது… இதனால் ரெயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும். எனவே, ரெயில் இன்றைய நாள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
ஈரோடு: இதேபோல் ரெயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில்) ஜோலார்பேட்டையில் இருந்து நேற்று மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு ஈரோட்டை வந்தடைந்தது… இந்த ரெயிலும் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக, சதாப்தி ரயிலுக்கு, ஜோலார்பேட்டையில் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.. அதாவது, கர்நாடகா மாநிலம் மைசூரு இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயிலானது, ஜோலார்பேட்டையில் நிறுத்துவதில்லை. முக்கிய வழித்தடமான ஜோலார்பேட்டையில், ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று பயணிகள் நீண்டகாலமாகவே, தொடர்ந்து வலியுறுத்தபடியே இருந்தனர்..
எல்.முருகன்: இதை ரயில்வே வாரியம் தற்போது ஏற்றுள்ளது.. வரும் ஜூலை 9ம் தேதி முதல் சதாப்தி ரயில், இரு மார்க்கங்களிலும் தலா ஒரு நிமிடம் நின்று செல்லுமாம்.. இந்த சேவையை, மத்திய இணை அமைச்சர் முருகன், வரும் 9ம் தேதி துவங்கி வைக்க உள்ளார் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.