‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
ஜூலை 14ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் ஆடியோ & ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசியுள்ள நடிகர் சூரி, “எஸ்.கே படத்தின் பாடல்கள் வெளியானவுடனே குட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் வரை வைரலாக ரீச் ஆகிவிடுகிறது. கொட்டுக்காளி பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் வாழ்த்தினார். சிவகார்த்திகேயன் முதல் படத்துக்கு எவ்வளவு உழைப்பைக் கொட்டினாரோ அதே உழைப்பை இன்றைக்கும் செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவு உயரத்தை எட்டிய பிறகும் மற்றவர்களை மதிக்கும் பண்பு மட்டும் மாறவே இல்லை.
என்னுடைய படம் நன்றாக இருந்தால் நடுராத்தியில் கூட போன் செய்து மகிழ்வோடு வாழ்த்துவார். இப்போது கூட இங்கே துணை நடிகர்களை கூட மேடையேற்றி பேச வைத்து அழகு பார்க்கிறார். மடோன் அஷ்வின் அடித்த முதல் பந்தே சிக்சர்தான். அந்த பந்து டெல்லியில் போய் விழுந்தது. யோகி பாபு நகைச்சுவை மட்டுமல்ல எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் நன்றாக செய்வார். அதற்கான சாட்சிதான் மண்டேலா. சிவகார்த்திகேயனின் ஆடியோ லாஞ்ச் விழாக்கள் படத்துக்குப் படம் பிரமாண்டமாகிக் கொண்டே செல்கிறது. அதற்குக் காரணம் அவருடைய ரசிகர் கூட்டம்தான். அடுத்தப் படத்தின் விழா இன்னும் பிரமாண்டமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.