திருப்பதியில் மொட்டை அடித்த தனுஷ்!
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் இன்று (ஜூலை 3) அதிகாலை தனுஷ் தனது குடும்பத்தோடு திருப்பதி ஏழுமலையான் தரிசித்து உள்ளார். அப்போது தனுஷ் மற்றும் அவரது மகன்கள் மொட்டை அடித்த தோற்றத்தோடு இருந்தனர். தனுஷ் மொட்டை அடித்து இருப்பது தனது 50வது படத்திற்கான புதிய தோற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இணையத்தில் தனுஷின் புதிய லுக் வைரலாகி வருகிறது.