சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் -இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஜிகர்தண்டா Double X.
இந்தப் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் எஸ்ஜே சூர்யாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டதோடு கொடைக்கானல் அருகே பிரம்மாண்டமான செட் போடப்பட்டும் சூட்டிங் நடத்தப்பட்டது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் சூட்டிங் நிறைவு: நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கியுள்ளார். தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் பல இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்த நிலையில் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டும் படத்தின் சூட்டிங் நடந்து முடிக்கப்பட்டுள்ளது. படத்தை ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் சூட்டிங் பல அழகான இடங்களில் நடந்து முடிந்துள்ளதாக படத்தின் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் தெரிவிதுள்ளார். பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை படம் கொடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ள கார்த்திக் சுப்புராஜ், விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டு, படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளதையொட்டி வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வித்தியாசமான அந்த வீடியோவில் கடந்த 28ம் தேதியுடன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறைவை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. வீடியோவில் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் காணப்படுகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியானது ஜிகர்தண்டா படம். இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கேங்ஸ்டர் படமாக வெளியான இந்தப் படம் கார்த்திக் சுப்புராஜிற்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. படம் வசூலிலும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் தற்போது 9 ஆண்டுகள் கழித்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இரண்டாவது பாகமாக வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் டீசர், போஸ்டர்கள் என வித்தியாசமாக அமைந்து ரசிகர்களையும் கவர்ந்தது. படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது தற்போது வெளியாகியுள்ள வீடியோவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை போலவே இந்தப் படமும விறுவிறுப்பான திரைக்கதையுடன் ட்ரெண்ட் செட்டராக அமையும் என்று படக்குழு சார்ப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.
It’s a WRAP for #JigarthandaDoubleX – see you in theatres this Diwali! #J2XShootWraps #DoubleXDiwali @offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh@kaarthekeyens @stonebenchers @5starcreationss @alankar_pandian @onlynikil @thinkmusicindia pic.twitter.com/6LXUITIAJ1
— karthik subbaraj (@karthiksubbaraj) July 3, 2023