சென்னை: மாமன்னன் திரைப்படத்தின் படத்தின் மகத்தான வெற்றியை உதயநிதி மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் மாமன்னன்.
சாதி அரசியலை மையமாக வத்து எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலின்,கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, லால் ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் மாரிசெல்வராஜ்: மாமன்னன் திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்தனர். இசைவெளியீட்டு விழாவில்,கமல்ஹாசன் முன்னிலையில் தேவர்மகன் தன்னை பாதித்ததாகவும், படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம்தான், மாமன்னன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
சாதி அரசியல்: மாரிசெல்வராஜ் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில் படம் வெளியாகும் போது பெரும் சர்ச்சைக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாமன்னன் படத்தை ஒரு சிலர் கடுமையாக விமர்சித்தனர். இது சாதி படம் என்றும், தொடர்ந்து இதுபோன்ற கதையை மாரி செல்வராஜ் எடுத்து வருவது சாதி வெறியை தூண்டும் வகையில் இருப்பதாக கருத்து வலுத்து வந்தது. இதுநாள் வரை வயிறு வலிக்க சிரிக்கவைத்த வடிவேலு, பல காட்சிகளில் கண்கலங்க வைத்துவிட்டார் என ஒரு பக்கம் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Thx #Maamannan team @mari_selvaraj @KeerthyOfficial @arrahman sir #fafa #Vadivelu annan @RedGiantMovies_ @SonyMusicSouth #Blockbuster pic.twitter.com/Mmdc9QAyel
— Udhay (@Udhaystalin) July 3, 2023
வசூல் நிலவரம்: உலக அளவில் சுமார் 800 திரையரங்குகளில் வெளியான மாமன்னன் முதல் நாள் 7 கோடி வசூல் செய்தது. இதைடுத்து, இரண்டாம் நாளில் வெறும் 4 கோடி மட்டுமே வசூலை பெற்றது. அடுத்து வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் 6 முதல் 7 கோடி வரை அசால்ட்டாக வசூலித்து தற்போது வரை இந்த படம் 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறுப்படுகிறது.
படக்குழு கொண்டாட்டம்: இந்நிலையில், மாமன்னன் படத்தின் மகத்தான வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, இயக்குனர் மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.