நடிகர் பிரித்விராஜ் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அரசின் பாராட்டுச் சான்றிதழ்… ஏன் தெரியுமா?

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட பிரித்விராஜ், `மொழி’, `காவியத்தலைவன்’ போன்ற தமிழ் படங்களின் மூலம் தமிழக ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர். இவர் நடத்தி வந்த படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளது.

நடிகர் பிரித்விராஜ்

இந்தியத் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான `பிரித்விராஜ் ப்ரொடெக்ஷன்ஸ்’, 2017 ஜூலை 26 அன்று தொடங்கப்பட்டது. 2019-ல் பிரித்விராஜ் தான் நடித்த `நைன்’ படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.

பிகில், பேட்ட, மாஸ்டர், கேஜிஎஃப் 2, காந்தாரா, 777 சார்லி போன்ற படங்களையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் படங்களும் தயாரிக்கிறது.    

இந்நிலையில் 2022-23 நிதியாண்டில் `பிரித்விராஜ் ப்ரொடெக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ சரியாக வரி கட்டியதால், அதனைப் பாராட்டி மத்திய நிதி அமைச்சகத்தின் தரப்பில் இருந்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.