Harley-Davidson X440 Price: ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக் விற்பனைக்கு வெளியானது

ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியின் முதல் Harley-Davidson X440 பைக்கின் விலை ₹ 2.29 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் 440 பைக்கில் 440cc என்ஜின் அதிகபட்சமாக 27 hp பவரை வழங்குகின்றது.

ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்ற மாடலான எக்ஸ் 440 ஆனது இந்திய சந்தையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ட்ரையம்ப் 400cc, ஜாவா மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Harley-Davidson X440

X440 பைக்கில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், கொண்டு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பாட் ஆனது ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி ஆகியவற்றுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றதாக உள்ளது.

முன்பக்கத்தில் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெறுகிறது. இதில் ப்ரீ-லோடு அட்ஜெட்மென்ட் கொண்டதாக உள்ளது. முன்புறத்தில் 18 அங்குல சக்கரம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றுள்ளது. 320 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.

எக்ஸ் 440 பைக்கில் 440cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்தலாம்.இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் வசதி கொண்டிருக்கின்றது.

Harley-Davidson x440 Price

  • X440 Denim – ₹ 2,29,000
  • X440 Vivid – ₹ 2,49,000
  • X440 S – ₹ 2,69,000

ஹார்லி எக்ஸ் 440 பைக்கிற்கு முன்பதிவு ஜூலை 4, 2023 மாலை 4.40 மணிக்கு ஹார்லி இணையதளத்தில் துவங்க உள்ளது.

Harley-Davidson X440 Image Gallery

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.