மாரி செல்வராஜூக்கு உதயநிதி பரிசளித்த காரின் விலை எவ்வளவு தெரியுமா?இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

சென்னை: மாமன்னன் படத்திற்கு கிடைத்த வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜிக்கு பரிசாக கொடுத்த காரின் விலையை கேட்டு ரசிகர்கள் வாயைப்பிளந்தனர்.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படம் கடந்த 29ம் தேதி வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை அன்று வெளியானது. இதில் உதயநிதி, வடிவேலு, கீர்த்த சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.

மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று பாசிட்டிவ்வான விமர்சனத்தை பெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது இத்திரைப்படத்தின் மீதான ஹைப் ஏகத்திற்கும் இருந்தது.

மாமன்னன்: பரியேறும் பெருமாள், கர்ணன் இரண்டு தரமான வெற்றிப்படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் மற்றுமொரு ஹிட் படத்தை கொடுத்து இருக்கிறார். மாமன்னன் திரைப்பட பாக்ஸ் ஆபிஸில் முதல் வாரமே அதிகம் கலெக்ஷனை அள்ளி வருகிறது. மாமன்னன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியின் இருக்கிறார்.

வடிவேலுக்கு கம்பேக்: மாமன்னன் கதாபாத்திரத்தில் எம்.எல்.ஏ.வாக நடித்த வடிவேலுவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். நான்கு ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த வடிவேலுக்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த படம் தோல்விப்படமாக அமைந்தது. ஆனால், வடிவேலுவுக்கு உண்மையில் கம்பேக் கொடுத்த திரைப்படம் இதுதான் என ரசிகர்கள் மாமன்னன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

udhayanidhi stalin gifted a car worth rs 57 lakh to maamannan director mari selvaraj

காரின் மதிப்பு: உதயநிதியின் கடைசி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் அளவிலும் வெற்றிப் படமாக அமைந்துவிட்டதால் உதயநிதி மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார். இதனால் இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்துள்ளா. சுமார் 57 லட்சம் மதிப்புடைய மினி கூப்பர் காரை மாரி செல்வராஜ்ஜுக்கு பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார். இதன் புகைப்படத்தை ட்விட்டரில் மாரி செல்வராஜை பாராட்டி இருந்தார்.

காரின் ஸ்பெஷல்: உதயநிதி பரிசாக கொடுத்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு என்பதை இணையவாசிகள் தேடித் தேடி படித்து வருகின்றனர். இந்தியாவில் விலை உயர்ந்த காரில் ஒன்றாக மினி கூப்பர் கார் இருக்கிறது. இந்த காரில் 2.0 லிட்டர் 1998 சிசி 4 சிலிண்டர் இன்லைன் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 189 பிஎச்பி பவரையும் 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் ஆட்டோமேட்டிக் டூயல் கிளட்ச் 7 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது என கார் குறித்து பல தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.