ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், விர்டஸ் செடான் காரின் பெர்ஃபாமென்ஸ் 1.5 TSI என்ஜின் பெற்ற மாடலின் GT வேரியண்ட் விலை ரூ.16.20 லட்சம் விற்பனைக்கு வெளியானது. 1.0 லிட்டர் மற்றும் 1.5 TSI என இருவிதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளது.
1.5-லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 150hp மற்றும் 250Nm டார்க்கை வழங்குகின்றது. செயலில் உள்ள சிலிண்டர் செயலிழக்க தொழில்நுட்பத்தைப் பெறுகிறது. இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் (DSG) இணைக்கப்பட்டுள்ளது.
2023 Volkswagen Virtus
விர்டஸ் காரில் GT மற்றும் GT Plus டிரிம்களில் கிடைக்கிறது, அங்கு GT டிரிம் மட்டும் DSG கியர்பாக்ஸை பெறுகிறது, GT Plus ஆனது மேனுவல் மற்றும் DSG கியர்பாக்ஸ் விருப்பங்களைப் பெறுகிறது.
VOLKSWAGEN VIRTUS PRICE (EX-SHOWROOM) | |
---|---|
Variant | Price |
Comfortline 1.0 MT | ₹ 11.48 லட்சம் |
Highline 1.0 MT | ₹ 13.38 லட்சம் |
Highline 1.0 AT | ₹ 14.68 லட்சம் |
Topline 1.0 MT | ₹ 14.90 லட்சம் |
Topline 1.0 AT | ₹ 16.20 லட்சம் |
GT 1.5 DSG | ₹ 16.20 லட்சம் |
GT Plus 1.5 MT | ₹ 16.90 லட்சம் |
GT Plus 1.5 DSG | ₹ 18.57 லட்சம் |
மேனுவல் வேரியண்ட்டை விட ரூ.70,000 குறைவாக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் வெளியாகியுள்ளது.அதே நேரத்தில் டாப் வேரியண்டாக உள்ள டிஎஸ்ஜி வேரியண்ட்டை விட ரூ.2.38 லட்சம் குறைவாகும்.
1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் அதிகபட்சமாக 115hp பவர் மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.