1 இலட்சம் XUV700 எஸ்யூவிகளை டெலிவரி வழங்கிய மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற XUV700 எஸ்யூவி காரின் டெலிவரி எண்ணிக்கை 1,00,000 இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளளது. மேலும், 75,000க்கு மேற்பட்ட ஆர்டர்களை குவித்து வைத்துள்ளது.

விற்பனைக்கு வெளியிடப்பட்ட 20 மாதங்களில் சுமார் 1 இலட்சம் எண்ணிக்கையை டெலிவரி வழங்கியுள்ளது. எக்ஸ்யூவி 700 காரின் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இருவிதமான ஆப்ஷனை கொண்டுள்ளது.

Mahindra XUV700

மஹிந்திரா XUV700 காரில் இரண்டு விதமான என்ஜின்களை பெற்றுள்ளது. அவை 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் 200hp மற்றும் 380Nm வெளிப்படுத்தும். அடுத்து,  2.2 லிட்டர் டீசல் என்ஜின் சில வேரியண்டில் 155hp மற்றும் 360Nm, மற்றும் 185hp மற்றும் 450 Nm (420Nm MT) வெளிப்படுத்தும். இந்த மாடல்களில் கியர்பாக்ஸ் ஆறு வேக மேனுவல் அல்லது ஆறு வேக டார்க் ஆட்டோமேட்டிக் ஆகியவை அடங்கும்.

அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 12 மாதங்களுக்குள், மஹிந்திரா XUV700 இன் 50,000 யூனிட்களை வெற்றிகரமாக விநியோகித்தது, அதைத் தொடர்ந்து அடுத்த 8 மாதங்களில் கூடுதலாக 50,000 யூனிட்களை வழங்கியது. இந்த ஆண்டு உற்பத்தி திறன்களை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி, இந்நிறுவனம் இப்போது அடுத்த 50,000 யூனிட்களை மிக விரைவான விநியோகத்தை அடையலாம்.

சமீபத்தில் எக்ஸ்யூவி 700 காரை ஆஸ்திரேலியா சந்தையில் அறிமுகப்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.